பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 o வல்லிக்கண்ணன் அாலையிலே ஆத்துக்குப் போய் வாறது. சாயங்காலம் வயல் பக்கம் போயி சுத்திப் பாத்துட்டு வாறது. அதோடு சரி...” 'கைலாசம் பிள்ளை பாடு நிம்மதிதான். உ.ம்ம்... கொடுத்து வச்சவரு ஐயா நீங்கt என்றாள் அவள். சிரிப்பு ஜலதரங்க ஒலி என இசைத்தது அவளது பேச்சுக்கிடையே. - - அதுக்காக எங்களை எல்லாம் மறந்துடனுமா என்ன? ஒரு நா எங்க வீட்டுக்கு வாங்க. வடை பாயாசத்தோடு விருந்து வைக்கிறேன். கைலாசம் பிள்ளேய்!” என்றாள். கண்ச் சிகிப்பை ஒலிபரப்பினாள். தோழியும் சேர்ந்து நகைத்தாள். ஒக்கிரமே கோயிலுக்கு வந்துட்டிகளாக்கும்? வேடிக்கை விசேஷம் எல்லாம் இன்னமத்தானே இருக்கும்! இப்பவே ஊருக்குப் போயி என்ன பண்ணப்போரீக?' என்றும் வம்புக்கிழுத்தாள் அவள். 'இப்பவே போகனே. அப்புறமும் கோயிலுக்கு வருவோம். இப்ப கும்பல் நெருக்கடி இல்லாம சாமி தரிசனம் செய்யலாமேன்னுதான்..."என்று அண்ணாச்சி இழுத்தார். அதுவும் சரிதான்.கூட்டம் வந்துக்கிட்டே இருக்கு.. அப்ப போயிட்டு வாங்க...மறந்திராதீக. பாளையங் கோட்டைக்கு அவசியம் வாங்க என்று கட்டாயப்படுத்தும் குரலில் கூறினாள். சரி, வாறேன் என்று சொல்லிவிட்டு கைலாசம்பிள்ளை தகர்ந்தார். கந்தபிள்ளையும் தொடர்ந்தார். இவ யாரு அண்ணாச்சி என்று கந்தபிள்ளை கேட் ஆாய் திறப்பதற்குள், இவ யாருன்னு தெரியுதா?’ என்று மற்றவரே முந்திவிட்டார். - தெரியலியே அண்ணாச்சி: