பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள், O 77. 'பாளையங்கோட்டையிலே முன்னாலே தான் குடியிருந்த போது, பக்கத்து வீட்டிலே சாமியார் அண்ணாச்சின்னு: ஒருத்தர் இருந்தாரே, அவரோட பெண்டாட்டிதான் இவ. பஞ்சவர்ணம்னு பேரு." கந்தபிள்ளையின் மூளைக்குள் இருண்டிருந்த பிரக்ஞைப் பகுதிகளில் ஒளிப்பொறி தெறிக்க உதவுகிற ஸ்விச் ஆயிற்று இந்த அறிமுகம். ஒ அவளா! பதினைந்து வருஷங்களுக்கு முன்பு பார்த்திருக்கேன். உங்க வீட்டுக்கு வந்த போதெல்லாம்தான். இடைக்காலத்திலே அவளை பார்த்ததில்லையா? அவளும் ஆளு ரொம்பவும் மாறிப் போயிருக்கா. உருவத்திலேயும் தான்’ என்று கந்தபிள்ளை தெரிவித்தார். -அந்தக் காலத்திலே இவள் இப்படியா இருந்தான்: நாகரிகமாக டிரஸ் செய்து கொள்வா அதுசரி. வீட்டி’ பொந்துக்கிளி மாதிரி இருப்பா. எப்பவும் அடுப்பங்கரையிலே அடுப்படி வேலை முடிந்தால், இரண்டாம் . கெட்டிலே’ வாசல்படியிலே தலைவைத்து படுத்தபடி, ஏதாவது கதைப் புத்தகம் அல்லது பொழுதுபோக்குப் பத்திரிகை படிச்சி கிட்டிருப்பா. வீட்டுக்கு யாராவது வந்தா, இவ வெளியே வந்து எட்டிப்பார்த்துவிட்டு. திரும்பவும் உள்ளே போயிருவா குடிக்க தண்ணீர் கேட்டால், செம்பிலே தண்ணீர் கொண்டு வந்து, இந்தாங்க என்று கொடுப்பா. கைலாசம்பிள்ளை மாதிரி பழக்கமான ஆளைக் கண்டதும் சிரிப்பா; ஒன்றிரண்டு வார்த்தை பேசுவா. புருசன் கண்டிப்பு அதிகம் இருந்ததாத் தோணிச்சு. தெருவிலே போற ஆளை ஒப் கைலாசம் பிள்ளேன்னு ஓங்கிய குரல் எழுப்பிக் கூப்பிடும் துணிச்சல் அந்நாளையப் பஞ்சவர்ணத்திடம் இருந்ததே இல்லே. ரொம்ப அடக்கமாக இருந்தாள். கந்தபிள்ளை தனது நினைப்பிலேயே மிதந்தவராய் தடந்தார்.