பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ) வல்லிக்கண்ணன் இன்னொருவன் சொன்னான்; இவங்க குடைராட்டிலே ஏறிச்சுற்றினது உமக்குத் தெரியாதா? அடாடா, உம்ம் கண்கள் புண்ணியம் செய்யலை வே: அப்படியா! அது எனக்குத் தெரியாதே! 密厂了豪蕊° வேண்டியதைக் காணத் தவறிவிட்டதில் உண்மையாகவே. வகுத்தம் கொண்டான் அவன் என்பதை அவனுடைய குரல் காட்டியது. 'ராட்டினம் வேகமாகச் சுற்றியபோது, இவங்க கூச்சல் போட்டும், சிரித்துக் கூவியும், என்னமா ரசிச்சாங்க தெரியுமா! சின்னப் புள்ளெக பிச்சை வாங்கனும், போம்! என்று ரசித்துச் சொன்னான் முதல் நபர். இதற்குள் பஞ்சவர்ணமும் தோழியும் பக்கத்தில் வந்து விட்டார்கள். கைலாசம் பிள்ளையைப் பார்த்ததும், அவள் முகம் ஒளிவீசச் சிசித்தாள். ‘இன்னும் நீங்க ஊருக்குப் போகலியா? என்று கேட்டாள். மாம்பழம் சாப்பிடுறீகளா?' என உபசரித்தாள். திடீரென நினைத்துக்கொண்டவள் போல், நாங்க ராட்டினத் திலே ஏறிச் சுத்தினோமே! நீங்க பாத்திகளா? என்று கேட்டாள். ஒரு சிறுமியின் குதுரகலம் அவள் கேள்வியில் தொனி செய்தது. "நாங்க இப்பதான் டவுனிவேருந்து வந்தோம் என்றார் கை. பிள்ளை. - 'முதல்லே குடைராட்டினத்திலே ஏறினோம். ஜாலியா இருந்தது. அப்புறம் தொட்டில் ராட்டுலே, மேலே போயி கீழே இறங்கி வந்து, அப்டீ. மேலும் கீழுமாச் சுற்றுமே அதிலே ஏறினோம். ஐயோடி, ஒரே பயமாப் போச்சு, குபீர்னு கீழே வரும்போது, என்னமா இருந்தது தெரியுமா? நான் ஒன்னு கூவிக்கிட்டு இவளை கட்டிப்பிடிச்சுக்கிட்டேன் இவ