பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் 0 81 ஆவிச் சேர்த்து என்னை புடிச்சுக்கிட்டா. அப்டி சுத் திச்சுத்தி அதுவும் ஒரு தமாஷ்தான் என்று கூறினாள். சிரித்தாள். அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் அதிசயப் பிராணிகளை பார்ப்பது போல் தங்களையே கவனிப்பதை பஞ்சவர்ணம் கவனிக்கவேயில்லை. தனது சந்தோஷத்தில் பூரணமாக ஆழ்ந்திருந்தாள் அவள் பிறகு ரொம்ப நேரமாச்சு. நாங்க போகனும் என்றாள். வாறோம் என்று சொல்லிவிட்டு மீனாட்சியுடன் நகர்த். தாள். அவர்களைப் பற்றி வம்பளந்தவர்கள், கைலாசம் பிள்ளையும் மற்றவரும் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் என்று புரிந்து கொண்டதும், நைசாக அங்கிருந்து நகர்த்து விட்டார்கள். பஞ்சவர்ணமும் சிநேகிதியும் போன பிறகு, கைலாசம் பிள்ளை தம்பி. நீரு சொன்னது சரிதான். அவ ரொம்பத் தான் மாறிப்டோனா என்றார். 'வீட்டிலே அடக்கமா, சாதுவா இருந்தவ. ஏன் இப்படி மாறிப் போனாள்?’ என்று தனக்குத் தானே உரத்து சிந்திப்பவர் போல் பேசினார். 'எனக்கு ஒண்னு தோணுது அண்ணாச்சி என்று கந்தபிள்ளை இழுக்கவும், என்ன.. சொல்லும் என்று அவர் துாண்டினார். - 'வீட்டுக்குள்ளே அதிகமாக ஆக்கினைகள் பண்ணி அதட்டி மிரட்டி அடக்கி வைக்கப்படுறவங்க, சந்தர்ப்பம் கிடைக்கிற போது, வெளியிலேயோ வீட்டுக்குள்ளையோ, சுயேச்சையா இருக்க நேர்கிற போது, சர்வ சுதந்திரமாக அட்டகாசம் பண்ணத் துணிகிறாங்க. அப்பாமார்கள் கறார் கண்டிப்பு பண்ணி, பயப்படுத்தி அமைதியை நிலைநாட்ட முயல்கிற வீடுகளிலே, அந்த அப்பா ஆபீசுக்கோ வேற எங்கேவோ வெளியேறுகிற போது, பிள்ளைகள் கட்டவிழ்ந்து