பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சின்னக் கேள்வி திருவாளர் ஞானப்பிரகாசம் இருக்கிறபக்கம் தலை காட்டுவதற்கே இளைஞர்கள் தயங்குவார்கள், சின்ன வகுப்புக்களில் படிக்கிற பையன்கள் பயப்படுவார்கள். காரணம் இல்லாமல் இல்லை. ஞானப்பிரகாசம் தனது அறிவுப் பேரொளியை வெளிச்சமிடுவதில் ஆர்வம் உடையவர். யாரிடமும் ஏதாவது கேள்வி கேட்டு, அவரவருடைய அறிவுத் திறமையை சோதிக்க வேண்டும் என்ற மனத்தினவு கொண்டவர். கேள்வி கேட்கப்படுகிறவரை திணறவைப்பதில், திகைக்கும்.டி. பண்ணுவதில், பதில் சொல்லத் தெரியாமல் முழிக்கவைத்துப் பார்ப்பதில் அவருக்கு அலாதிகான சந்தோஷம். இதற்காக என்றே அவர் ஏகப்பட்ட விஷயங்களை தெரிந்து வைத்திருந்திருந்தார். கையில் அகப்படுகிற சகலவித மான பத்திரிகைகளையும் நிதானமாக மேய்ந்து, துணுக்கு களையும் அறுவை ஜோக்குகளையும், புதிர்களையும் விழுங்கி அசைபோட்டு மகிழ்வது அவருடைய சுபாவமாகும். அவரை அணுகிப்பேச்சுக் கொடுக்கிறவர்களை பிரமிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையோடு அவ்வப்போது அவர் கேள்விகளையும் தகவல்களையும் உலுப்புவார். இதுவரை வரலாறு ஐந்து பேர்களைத்தான் உலகமகா வீரர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. அவர்கள் யார் யார் தெரியுமா? என்று ஞானப்பிரகாசம் கேட்பார். உனக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகுது: திவ்யமா மூக்குமுட்ட தின்னத்தெரியும்; வேறென்ன தெரியும் என்று