பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 () வல்லிக்கண்ணன் _ ** o o - 寮汉 蓟 மேல் நி @ ೬f ர்ஜ்வு:ை இரt; வt நிறுத்தி லேச ாகச் சிரிப்பார், அந்த தோரணையைக் கண்டே மற்றவன் மிரண்டு விடுவான். விழித்தபடி நிற்பான். "மகா அலெக்சாந்தர், ஜூலியஸ் சீசர், நெப்போலியன் போனபார்ட், ஜெங்கிஸ்கான் தி ஹெட் ஹன்டர், அடால்ப் ஹிட்லர் உலக மகாவீரர்கள் இந்த ஐந்து பேரும்தான் என்று. அடித்துச் சொல்வார் ஞானப் பிரகாசம். அடுத்தபடியாக தனது மகத்தான இன்னொரு கேள்வியை விசுவார் அவர்: ஜனசமுதாயத்துக்கு- உலகம் பூராவுக்குமே- மகத்தான நன்மை புரிந்த மாமனிதர்கள் மூன்றே மூன்று பேர்தான். அவர்கள் யார்? அவர்கள் என்ன செய்தார்கள்? نی அவரிடம் பேசவந்தவர் அப்பாவித் தனமாக முழிப்பதைத் தவிர வேறு என்ன பண்ண முடியும்: ஞானப்பிரகாசம் குதூகலமாகச் சிரிப்பார். அமெரிக்க ஜனாபதி ஆபிரகாம் லிங்கன், மாபெரும் ரஷ்யதலைவர் லெனின் இந்தியாவின் தேசப் பிதா மகாத்மா காந்தி, இந்த மூவர் தான் மனித குலத்துக்கு நிலையான நன்மை செய்திருப்பவர்கள். ஆபிரகாம் லிங்கன் அடிமைத்தனத்தை. அடிமை வியாபாரத்தை, ஒழித்தார். லெனின் ஏழை. எளியவர்கள்; பாட்டாளிமக்களுக்கு வளமான வாழ்க்கை கிட்ட வழி வகுத்துக் காட்டினார். மகாத்மா காந்தி தீண்டாமையை அகற்றி அகிம்சை முறையைக் கையாண்டு, வெற்றிபெறும் வழியைக் காட்டினார். இது மாதிரி விஷயங் களை எல்லாம் தெரிந்து கொள்ளணும், பிரதர் பொது அறிவை விருத்தி செய்து கொள்ளனும்: என்று உபதேசங் களை உலுக்கித் தள்ளுவார்.