பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 85 எதுக்கு வீண்வம்பு கொம்பு உள்ள பிராணிகளைக் கண்டால் தூர விலகிப்போகனும் என்பார்கள். இந்தக் கொம்பர் பக்கம் போகாமல் இருப்பதும் நல்லதுதான் என்று அவரை அறிந்தவர்கள் எண்ணலானார்கள். ஞானப் பிரகாசம் இருக்கும் இடத்தைத் தவிர்த்தார்கள். அவர் துரத்தில் வருவது தெரிந்தாலே, வழி விலகி சந்து பொத்து களில் புகுந்து போகலானார்கள். படிக்கிற பையன்களிடம், அவர்கள் அறிவை சோதிக் கிற்ேன் என்று சொல்லி, எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு? அதுக்கு அடுத்து உயரமான சிகரம் எது? உலகத்தில் மிக நீளமான ஆறு எது? முத்துக்கள் எத்தனை நிறங்களில் கிடைக்கின்றன? என்று இப்படி ன்து எதையோ கேட்டு அவர்களை மிரளச் செய்வார். சிலசமயம் குதர்க்கமான கேள்விகள் கேட்டார். -ஆனா வந்து ஆவன்னாவின் அம்மா, ஆனால், ஆவன்னா ஆனாவின் மகன் இல்லை, அப்படியானால் ஆனாவுக்கு ஆவன்னா என்ன வேண்டும்? பையன்கள் தலையைச் சொறிவார்கள். ஞானப் பிரகாசம் கனைப்பார்: அட மண்டுகங்களா மடசாம்பிராணி களா! மக்குப் பிளாஸ்திரிகளா! ஆனாவுக்கு ஆவன்னா மகள், இது கூடத் தெரியவியே மண்ணாந்தைகளா? உம்ம ஜெனரல் நாலஜில் இடி விழ என்று பையன்கள் கரித்துக் கொட்டுவார்கள், மனசுக்குள் தான். தங்கன் எரிச்சலையும் ஆத்திரத்தையும் வெளிப்படையாகக் காட்ட முடியாது உள்ளத்தில் குமுறுவார்கள். அவர்கள் சந்தோஷப்படும் படியாக அவரை மடக்கிவிடக் கூடிய திறமைசாலி ஒருவன் வந்து சேர்ந்தான். ஒரு மாணவன்த்ர்ன். க-8