பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ6 () வல்லிக்கண்ணன் அயலூரிலிருந்து வந்தான் சிதம்பரம். பத்தாவது படிப்பவன். யாரையும மதிக்காத இயல்பு கொண்டவன். கொஞ்சம் புத்திசாலி. அதைவிடக் குதர்க்கமும் வக்கிரப் போக்கும் சிறது அதிகமாக உடையவன். அவனிடம் ஞானப்பிரகாசத்தின் போக்குகள் பற்றி. பையன்கள் கண்தகதையாய் சொன்னார்கள், 'அவரை நான் பார்க்கனுமே!’ என்று துடித்தான் சிதம்பரம். உன்னிடம் கேள்விகள் கேட்டு உன்னை ஆ. அழப்பண்ணிவிடுவார் அவர்?’ என்றான் ஒருவன். 'எந்த மம்மா வந்தாலும் ஐயாகிட்டே அவரு பருப்பு லேகாதுன்னேன், தெரியுமா?’ என்று ஜம்பம் அடித்தான் சிதம்பரம். பந்தயம் கூறி சவாலிட்டார்கள் உள்ளூர் பையன்கள். 'ஒகோன்னானாம்; அதையும் பார்த்துப் போடுவோமே!’ என்றான் சிதம்பரம். ஞானப்பிரகாசத்திடம் அவனும் இன்னொருவனும் போனார்கள். அறிமுகப்படலம் நடந்து முடிந்தது. பெரியவர் வழக்கம்போல் கேள்விகள் கேட்டார். இடையே பொடி வைத்து ஒரு கேள்வி: "எஸ்.பி. முத்துராமன் போலீசுக்குப் பயப்பட மாட்டார். அவர் பயப்பட வேண்டி&துமில்லை. ஏன்? - அவரே எஸ்பி ஆச்சே!” என்று சொன்ன சிதம்பரம். "நீங்க படித்த பத்திரிகையிலேயே இதை நானும் படித்தேன். வேறே ஒரிஜினலா ஏதாவது கேளுங்களேன்’ என்றான். அறிவின் சோதனையாளருக்கு இது எதிர்பாராத. அனுபவம். கொஞ்சம் திகைத்து உட்கார்ந்து விட்டார். -