பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் C, 87 "நீங்களே எல்லோரையும் கேள்விகள் கேட்கிறீர்களே நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லுங் கள் பார்ப்போம் என்றான் பையன். அவனோடு வந்த பையனுக்கு ஒரே பிரமிப்பு. இதற்குள் வேறு சில இளைஞர்களும் வந்து சேர்ந்திருந்தார்கள். ஞானப்பிரகாசம் தலையாட்டுவதற்கு முன்பே சிதம்பரம் கேள்வியை உதறினான். ‘கடவுள் கருணை மயமானவர். நமது பாபங்களை மன்னிக்கும் அருள் உள்ளம் கொண்டவர். அவரது அருள் நிறைந்த மன்னிப்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்?" 'இதயபூர்ணாக பிரார்த்தனை பண்னவேண்டும்’ என்றார் பெரியவர்.

  • இல்லே, நாம் பாபங்கள் செய்யவேண்டும்! பாடங்கள் செய்தால்தானே கடவுளின் மன்னிப்பை பெறமுடியும்: மனிதர்கள் பாபமே செய்யாவிட்டால், கருணை மகமான கடவுள் எப்படி மன்னிக்க இயலும்? என்று வாதாடினான் சிதம்பரம். -

ஒகோகோ என்று கூவி கைதட்டி ஆர்ப்பரித்தார்கள் கூடி நின்ற இளைஞர்கள். வெற்றிப் பெருமிதத்தில் மிதந்த சிதம்பரம், இன்னொரு சின்னக்கேள்வி. ஐயா!' என்றான். ஞானப்பிரகாசம் இதுவரை எதிர் கொண்டிராத புதிய அனுபவம் இது. இப்படிச் சொல்லுவது தப்பு என்று கண்டிக்கவும் முடியவில்லை; பையனின் புத்தி சாதுரியத்தைப் பாராட்டவும் இயலவில்லை. அவரால். "ஊம்ங் என உறுமல் போல் ஒரு ஒலியை அவர் வெளிப் :படுத்தினார்.