பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 91 தான் பார்ப்போமே என்று சொற்களை உதறிக்கொண்டிருந் தாள். அவன் திரும்பித் திரும்பி என்னவோ பேசியபடி ள் கூட்டரை இயக்கினான். - ஜாலிப் பறவைகளே! நேரே ரோடைப் பார்த்தபடி சவாரி போங்க. இல்லேன்னாக்க ஆஸ்பத்திரிக்கோ சுடுகாட்டுக்கோ ப்ோக நேரிடும்!” என்று எச்சரிக்க அங்கே யாரும் இல்லை. - இந்திரா அவர்களைப் பார்த்தாள். ஒகோன்னாளாம்: என்று சீட்டியடித்தது அவள் மனக்குறளி, இந்த சுந்தரியை நேற்று மாலை வேறொரு சுந்தரனோடு பார்த்தேனே. இதே மாதிரி ஜாலியாகத்தான். அப்போ இவள் கைகள் அவன் வயிற்றுப்பக்கம் சுற்றிப் பிடித்திருந்தன: தலை தோள்மீது சாய்ந்திருந்தது. இவள் காலேஜ் மாணவி போலிருக்கு; அவன் மாணவனாக இருப்பான். சுந்தரி வெவ்வேறு சுந்தரன்களோடு ஸ்கூட்டரில் போவதை சினிமா தியேட்டரில் மிக மகிழ்ச்சியோடு காணப் படுவதை நாகரிக ஒட்டல்களில் வளையவருவதை இந்திரா அடிக்கடி கவனித்திருக்கிறாள். 'இதுக்குப் பேர் என்ன?’ என்று கேட்டது அவள் அறிவு. நாகரிகம் என்று இருக்கும் சுமுகமான பழக்கம், அல்லது சினேகம், அல்லது இப்படி ஏதோ ஒன்று என்று மனக்குரல் பேசியது. - உடனேதான் அவளுக்கு சிரிப்புவந்தது, சிரித்தாள். காவலர் முழித்துப் பார்த்தார். அவள் மூஞ்சியை உம்மென்று வைத்துக்கொண்டு, ரோடை நோக்கினாள். ஆபீஸ் நேரம். அலுவலகங்களை நோக்கி பலப்பலர் போய்க்கொண்டிருந்தார்கள். நவயுவர்களும் நவயுவதிகளும்