பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 98 சோஷியலாப் பழகுகிறது. ஃபிரீயா பொழுது போக் குவது, கட்டுப்பாடு இல்லாத நட்பு என்று பெயர் ஏதாவது இருக்கும் என்று அவள் மனம் குரல் கொடுத்தது. அவளுக்குச் சிரிப்புமேலெழுந்தது. சிரித்தாள். ஏய் என்ன இது? வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கமாட்டே' என்று காவலர் அதட்டினார். கப்சிப்! அவள் முகம் கடுமை ஏற்றது. அவன் கண்கள் மட்டும் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன. கார் ஒன்று அவசரம் இல்லாமல் நகர்ந்தது. அதில் ஒரு அம்மாள். செல்வச் செழிப்பின், வளமான வாழ்க்கையின், நிறைவான போஷாக்கின் சின்னமாக, மீனுமினுப்போடு விள்ங்கிய சதை உருவம். அவள் பக்கத்தில் அவளை மகிழ்விக்கும் அன்பன். - அவள்ை இந்திரா எத்தனையோ தடவை கவனித்திருக் கிறாள். பெரிய இடம் பணத்துக்குக் குறைவு இல்லை. வாழ்க்கையைப் பற்றிய கவலை எதுவும் கிடையாது. அவள் கணவன் பல வழிகளில் பணம் பண்ணிக்கொண்டிருந்தான். அவள் சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருந்தாள்' அவளை மகிழ்விக்கும் அன்பர் அடிக்கடி மாறிக் கொண்டிருந் தார். இப்போது அவளோடு போவது அவள் கணவன் அல்ல: போனவாரம் பார்வையில் பட்ட அன்பனும் இல்லை.

  • இதற்குப் பேர் என்னவோ? இது பாராட்டப்பட வேண்டிய செயல்தானா?” என்று கேட்டது இந்திராவின் மனம். -

அப்படித்தான் இருக்கும். இது சுமுகமான, சமூகநல, நாகரிக நட்பு உறவு என்று ஏதாவது சிறப்புப் பெயர் பெற்றிருக்கும் என்று உள்ளொவி குரல் கொடுத்தது. உடனே சிரிப்பு வந்தது. அவன் சிரித்தாள்.