பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதந்திரப் பறவைகள் O 97 அவருக்காக அவளது போதைக்கண்கள் போதைப் பார்வை ஏந்தி நின்றன. அவர் கண்களைத் தொட்டு மின்னல் மொழிகள் பேசின. அவளுடைய பழச்களை உதடுகள் இனிய புன்முறுவலை அவருக்கு அவ்வப்போது பரிசளித்தன. இதை எல்லாம். ஏகநாதன் உணர்ச்சியோடு கவிதைகளில் பதிவு செய்திருக்கிறாரே உள்ளத்தின் உணர்ச்சிகளை எழுதி வைத்ததோடு அவர் மகிழ்ந்து போனார். அவளிடம் பேசி, தன் அன்பையும் ஆசைப்பெருக்கையும் உணர்ச்சித் துடிப்பை யும் அவளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அவர் மனம் குரல் கொடுத்தாலும் அவர் துணியவில்லை. திடீரென்று வெண்ணிலாவுக்குத் திருமணம் நிச்சயமா யிற்று. உரிய நாளில் அது நிகழ்ந்தது. அவள் புதுப்பெண் னாகக் காட்டிய கோலம் கவிஞரை படாதபாடு படுத்தியது. ஏக்கக்கவிதைகள் பல எழுதிக் வைத்தார் அவர். வெண்ணிலா அந்த ஊரை விட்டுப் போய்விட்டாள். அந்த ஊரே ஒளி மங்கி, களை இழந்து போனதாகத் தோன்றியது ஏகநாதனுக்கு. விரைவிலேயே அவரும் வெளியூர் போய்விட்டார். எங்கோ ஒரு நகரத்தில் ஏதோ ஒரு அச்சகத்தில் அவருக்கு ஒது வேலை கிடைத்திருந்தது. நல்ல காலம். எழுதப்படாமலிருக்கிற கவிதையே மிக உன்னதமான் கவிதை; படைக்கப்படாமலிருக்கிற சிலை அல்லது ஒவியமே மிகச் சிறந்த கலைப்படைப்பு: நிறைவேறாமல் இருந்து விடுகிற காதலே அமர காவியக்காதல். இந்த நியதிப்படி ஏகநாதன் வெண்ணிலா காதலும் உத்தமமான இலக்கியக் காதலாகும் என்று ஏகநாதன் கருதினார். அப்படியே ஒரு கவிதையும் எழுதிவைத்தார். அவருடைய நினைவெல்லாம் வெண்ணிலா, கனவு பூரா வும் வெண்ணிலா: அவரது எழுத்துக்களிலும் வெண்ணிலாவே குடியிருந்தாள். -