பக்கம்:சுதந்திரமா.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் ரேடியோ

எங்கோ போய்க்கொண்டிருந்தேன். எதிரே வந்த அன்பர் பரபரப்போடு, 'யாரோ படுபாவி காந்தியைச் சுட்டுவிட்டானம்' என்று சொல்லி விம்மினர். "ஹா! யார் சொன்னர்கள்?" என்று படபடப்புடன் கேட்டேன். 'ரேடியோ அலறுகிறதே! என்ருர் உடனே யாரிடம் ரேடியோ இருக்கிறதென்று தேடி ஓடினேன், ஒடினேன் என்று சொன்னது வேகத்தைக் குறிக்கச் சொல்லவில்லை. உண்மையாகவே ஓடினேன். ஒரு ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கே ரேடியோவின் அடியில் நூறு இரு நூறு பேர்கள் கூடியிருந்தனர். சில நேரம் கழித்து, ஐவா ஹர்லால் நேரு துக்கம் குமுறும் குரலுடன், 'ஜோதி அணேந்தது' என்று தொடங்கினர். மூச்சுக்கூட விடாத படி எல்லோரும் அதைக் கேட்டோம். மேற்கொண்டு மற்றவர்கள் பேசியதையும் கேட்டோம்.

மறுநாள் வேறு ஒர் அன்பருடைய வீட்டில் ரேடியோ வின் அடியில் சோறுகூடச் சாப்பிடாமல், டில்லியில் காந்தி, யின் திருவுடலத்துக்கருகே நிகழும் நிகழ்ச்சிகளைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். அப்போதுதான், நம்மிட மும் ரேடியோ இருந்தால் வீட்டில் இருந்தபடியே எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்கலாமே! என்ற எண்ண்ம் என் மனத்தில் அழுத்தமாகப் பதிந்தது. அதற்கு முன் ரேடியோ வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் இப்போது அது மிகவும் அவசியம் என்று தோன்றியது.

நான் ரேடியோவில் எப்போதாவது பேசில்ை என் வீட்டில் உள்ளவர்கள் அந்தப் பேச்சைக் கேட்க வேறு

7 . . *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/105&oldid=686011" இலிருந்து மீள்விக்கப்பட்டது