பக்கம்:சுதந்திரமா.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 - சுதந்தரமா s

யார் வீட்டுக்காவது போய் வந்தார்கள். சிறப்பாகப் பாட்டுக் கச்சேரி ஏதாவது ரேடியோவில் கடந்தாலும் இருந்தபடியே இருந்து கேட்க முடியாது; தெரிந்தவர்கள் வீட்டுக்குத்தான் போகவேண்டும். இத்தகைய சமயங் களில், நாமும் ரேடியோ வாங்க வேண்டும் என்ற கினேவு தோன்றியதுண்டு. ஆனால் அது அவ்வளவு பலமாக இல்லை. சில் சமயங்களில் என்னிடம் மரியாதை காட்டும் நண்பர்கள் சிலர், "நான் வருகிற வியாழக்கிழமை ரேடியோ

வில் பேசப் போகிறேன். நீங்கள் கேளுங்கள்" என்று சொல்வார்கள். அவர்களுக்கு என்னிடம் ரேடியோ லெட் இருப்பதாக நம்பிக்கை. அவர்களிடம், "என்னிடம்

ரேடியோ இல்லை; அதல்ை உங்கள் பேச்சைக் கேட்க முடி யாது" என்ற சொல்லலாமா? அது என்னுடைய கெளர வத்தைக் குறைத்துவிடாதா? 'ஆகட்டும்” என்று மதிப் பாகச் சொல்லிவிடுவேன். மறுபடியும் அவரைக் காணும் போது என்ன, கேட்டீர்களா? என்று அவர் கேட்டால், "அடடா மறந்துபோய்விட்டேனே! அன்று மாலே எங்கோ கூட்டத்திற்குப் பேசப் போய்விட்டேன்' என்று சொல் வேன். பாவம் கான் அவர் பேச்சைக் கேட்டு, இரண்டு வார்த்தைகள் புகழாகச் சொல்வேன் என்று எதிர்பார்த்தே அவ்வாறு கேட்பார். நான் கேட்கவில்லை என்று தெரிந்த தும் அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே! எப்படிப்பட்ட சொற்பொழிவாளராக இருந்தாலும் பிறருடைய பாராட் டும் மதிப்பும் இல்லாவிட்டால் ஊக்கம் கொள்வதில்லை. அப்படி: இருக்கும்போது என் நண்பர் என்னிடம் மதிப் புரையை எதிர்பார்த்தது தவறு அல்லவே! இப்படி கண் பர்களிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல்,

அவர்களுடைய பேச்சையோ பாட்டையோ கேட்கும்படி. யாக நம்மிடம் ரேடியோ இருந்தால் எவ்வளவு நன்ருக இருக்கும் என்று அப்பொழுது நினைத்துக்கொள்வேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/106&oldid=686012" இலிருந்து மீள்விக்கப்பட்டது