பக்கம்:சுதந்திரமா.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 OC) சுதந்தரமா!

பிறகு இங்கிலீஷ் சங்கீதம் பிறகு ஹிந்துஸ்தானிப் பாட்டு; அப்பால் இன்னதென்றே உருத் தெரியாத வாத்திய ஒலிஇப்படி மாற்றி மாற்றி அரை அரை கிமிஷம் கேட்பேன். எதையும் ரவிப்பதில்லை. உலக முழுவதும் ஒரு கணத்தில் சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்பது போன்ற ஓர் ஆசை. ஒன்றையாவது உருப்படியாகக் கேட்கமாட்டேன்.

என் மனைவி என்ன செய்வாள் தெரியுமா? ஆங்கிலத் தில் ஏதோ முக்கியமான செய்தியைக் கேட்டுக்கொண்டிருப் பேன். அவள் வருவாள். 'இந்த வறட்டுப் பேச்சு எதற்கு? காளேக்குப் பத்திரிகையில்தான் பார்க்கப் போகி. lர்களே. டில்லி அயல் நாட்டு அஞ்சல் வைத்தாலும் பாட்டுக் கேட்கலாம்” என்று திருப்புவாள். ஏதோ கனக் காக அந்த அலை நீளத்தைத் திட்டமாகத் தெரிந்து கொண்டவளைப்போலத் திருப்புவாள். கர்புர் கடர் புடர் என்ற சத்தந்தான் கேட்கும். 'கேற்றுக் கேட்டேனே" என்று சொல்லிக் கொண்டே திருப்புவாள். "நான் வைக்கி றேன். பார் என்று கையைக் கொண்டு போவேன்.எனக்கு 'கிச்சயமாக இவளுக்கு அந்த இடம் தெரியாது. நமக்குத்தான் அது தட்டுப்படும்” என்று உறுதியான எண்ணம். அவளோ என் கையை ஒதுக்கிவிட்டுத் திருப் பிக்கொண்டே இருப்பாள். உண்மையில் எனக்கும் தெரி யாது அவளுக்கும் தெரியாது. கடைசியில் ஏதோ ஒரு வாத்திய ஒலி கேட்கும், 'பார்த்தீர்களா? கண்டுபிடித்து: விட்டேன்’ என்று சொல்வி முடிப்பதற்குள் அது கர்ன கடோரமாகக் கத்தும். "என்ன பாட்டென்றுதெரிகிறதா?" என்று கேட்பேன். "இருங்களேன் கேட்டுத்தான் பார்க்க லாம்" என்று அவள் காதை நெறித்துக்கொண்டு கேட்

பாள். அது : பாட்டாகவா இருக்கும்? தட்டுமுட்டுச் சாமான்களே உருட்டுவது போல இருக்கும்; சில சமயங், களில் யாரோ அழுவது போல் இருக்கும். 'இந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/108&oldid=686014" இலிருந்து மீள்விக்கப்பட்டது