பக்கம்:சுதந்திரமா.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவுக் கலை

“சாப்பிடுவதற்காக ஜீவித்திருக்கிருயா? ஜீவித்திருப்

பதற்காகச் சாப்பிடுகிருயா?" என்று கேட்டால், " ஜிவித் திருப்பதற்காகத்தான் சாப்பிடுகிறேன்" என்று பதில்

சொல்லத் தயாராக இருக்கிருேம். சாப்பிடுவது என்ற

காரியம் மிகவும் மட்டமான வேலையென்றும், அதை ஏதோ

கடமைக்குச் செய்து வருகிருே மென்றும் சொல்லாமல்

சொல்லி வருகிருேம். உண்மையில் நம்முடைய அந்தரங்க

மான எண்ணம் அதுதான? சாப்பிடுவதில் கமக்குச் சிறிதும்

ஆவல் இல்லையா? வெறும் கடமையாக நினைத்துச் செய்வ

தாக இருந்தால் அதற்கு இந்த உலகமெல்லாம் ஒவ்வொரு

கணமும் உழைத்துக்கொண்டிருப்பானேன்?

கடவுள் சாப்பிடுவதை வெறும் கடமையாக வைக்க

வில்லை. மனிதன் சாப்பிடுவதையும் ஒரு கலையாகச் செய்ய

வேண்டு மென்பதுதான் பகவானுடைய திருவுள்ளம்.

இல்லாவிட்டால் வயிற்றுக்குப் பக்கத்திலே ஒரு வாயை

வைத்துத் தலையணையில் பஞ்சைத் திணிப்பதுபோல

உணவைத் திணிக்க ஏற்பாடு செய்திருப்பாரே! வாயில்

காக்கு என்ற ரளிகனே ஏற்படுத்தி வயிற்றுக்குப் ப்ோகும்

அத்தனே பதார்த்தங்களையும் ருசி பார்த்து அனுப்பும்

படியாக விதித்திருக்கிருரே. இதிலிருந்தே சாப்பிடுவது

கடமை அல்ல, சுவையுணர்ந்து ரஸிக்கும் கலையென்று தானே தெரிந்துகொள்ள வேண்டும்? ரஸம், சுவை, விருந்து

என்றெல்லாம் கவிக்கும் கலக்கும் உபயோகப்படும். வார்த்தைகளைத் தந்தது இந்த உணவுக்கலை யென்பதை காம மறககக கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/22&oldid=685929" இலிருந்து மீள்விக்கப்பட்டது