பக்கம்:சுதந்திரமா.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சுதந்தரமா!

உணவு ஆகிவிடும் என்று அதற்குள் நிச்சயம் செய்து விடாதீர்கள். கடவுள் நமக்கு ஐந்து இந்திரியங்களைக் கொடுத்திருக்கிருர். கண்டு கேட்டு உண்டு உற்று அறியும் ஐந்து பொறிகளும் இந்த உடம்போடு சம்பந்தமான அது பவங்களை உணர்கின்றன. காற்று வீசினல் அதை உற்று. உணர்கிருேம்; பாட்டுப் பாடினல் கேட்டு உணர்கிருேம்; தேனே உண்டும், அத்தரை மோந்தும், வானவில்லைப் பார்த்தும் உணர்கிருேம். நாக்கு இந்த ஐந்து இந்திரியங் களில் ஒன்று சுவை உணரும் பொறி. -

உணவு விஷயத்தில் ஐந்து இந்திரியங்களுக்கும் வேலை கொடுக்கிருேம். நாக்கு மாத்திரம் உணவுக்கு அவசியம் என்பது அவசரத்தில் தீர்மானிக்கும் விஷயம். உணவு கன்ருக இருக்கிறதென்பதை காக்குக்கு அடுத்தபடி கண் தீர்மானிக்க வேண்டும். உண்மையில் கண் தீர்மானித்த பிறகு தான் காக்குக்கு உணவு போகும்.

ஹோட்டலில் வரிசையாகத் தின்பண்டங்களே அடுக்கி வைத்திருக்கிருர்கள். அவற்றில் எத்தனை உருவம் எத்தனே கிறம்! அடுக்கி இருக்கிற அழகுதான் என்ன! வைத் திருக்கிற அலமாரி, அதற்கு ஜோடனே, ஹோட்டலிலுள்ள படங்கள், பளபள வென்றிருக்கும் நாற்காலிகள் மேஜை கள் எல்லாம் சேர்ந்து கண்ணே இழுக்கின்றன. ஹோட்டல் வாசலிலேயே கண்ணுக்கு வேலை தொடங்கி விடுகிறது. வாசலிலுள்ள பலகை தோரணங்கள் வா வா என்று அழைக்கின்றன. உள்ளே புகுந்தாலோ அழகான சுவர்கள், கிலைக்கண்ணுடிகள், காற்காலி மேஜைகள் இவை உட்காரச் சொல்கின்றன. தின்பண்டங்களின் பக்கம் கண்ணேத் திருப்பினல் கண்கள் அங்கே போய் ஒட்டிக் கொள் கின்றன. கண்ணே மீட்டுக் கொண்டு எதையாவது பொறுக்கி எடுக்கச் சிறிதுநேரம் ஆகிவிடுகிறது. நம்முடைய கண் முதலில் ஈடுபட்டால்தான் உண்ணவேண்டும் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/26&oldid=685933" இலிருந்து மீள்விக்கப்பட்டது