பக்கம்:சுதந்திரமா.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேணுப் பைத்தியம்

பவுண்டன் பேணுப் பைத்தியம் எனக்குப் பிடித்த கதையைக் கேட்கிறீர்களா ? ஆதியில் நான் சாதா ரணப் பேணுவால்தான் எழுதிவந்தேன். எழுத்தும் குண்டு குண்டாக இருந்தது. கண்ணில் ஒத்திக் கொள்ள லாம் என்ற புகழைப் பெற்ற எழுத்து என் எழுத்து. ஆனல், கினைத்த இடத்தில் எதையாவது குறித்துக் கொள்ள வேண்டுமானல் பேன மைக் கூட்டுக்கு எங்கே போவது ? அந்த இரண்டையும் போகும் இடங் களுக்கெல்லாம் சுமந்துகொண்டா செல்ல முடியும்? பென் சிலைக் கொண்டுபோகலாம். பென்சில்களில் ஒன்றுகூடப் பளிச்சென்று எழுதுவதில்லையே வெள்ளேக் காகிதத்தில் இன்னும் வெள்ளேயாக எழுதும் பென்சிலே வைத்துக் கொண்டு என்ன செய்வது ? -

கடைசியில் ஒரு பெளண்டன் பேணு வாங்கி விடுவது என்று தீர்மானித்துக் கொண்டேன். அதுவரையில் வாங் காததற்கு முதல் காரணம், பெளண்டன் பேணுவில் எழுதினல் கையெழுத்து மோசமாகிவிடும் என்று சில கர்நாடக ஆசாமிகள் சொன்னதுதான். பேணு வாங்கின அன்றே என் அருமந்த நண்பர் ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கினேன். கட்டைப் பேணுவால் எழுதி யிருந்தால் மூன்று நாலு பக்கங்களுக்கு மேலே எழுத மாட்டேன். இந்த ஊற்றுப்பேனவில்ை எழுதத் தொடங்கி, னேன். கடிதம் மேலேமேலே வளர்ந்துகொண்டே சென். மது பேணுவிலிருந்து மை ஊற்றுப்போலச் சுரக்க, மூளையி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/30&oldid=685937" இலிருந்து மீள்விக்கப்பட்டது