பக்கம்:சுதந்திரமா.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேணுப் பைத்தியம் 23

லிருந்து கருத்தும் ஊற்ருகவே சுரங்தது. காற்பது பக்கம் எழுதிவிட்டேன். எழுதி முடித்த பிறகு எனக்கே ஆச்சரிய மாக இருந்தது. 'அடடா ! இத்தனே நாள் ஏமாந்து போய்விட்டோமே ! கட்டைப் பேணுவில் கம் அருமையான கருத்துக்களே யெல்லாம் எழுத முடியாமல், வெட்டியாக வாழ்நாளைப் போக்கி விட்டோமே !' என்று இரங்கினேன். கடிதம் எழுதுவதோடு கின்றேன? என் புத்தகங்களில் எது எதில் என் பேர் இல்லையோ அதில் எல்லாம் என் பெயரை எழுதினேன். ஒரு வாரமாக எழுதாதிருந்த டைனியை எழுதினேன். அதற்கு முன்புள்ள பக்கங்களில் ஒருவரி இரண்டு வர்தான் எழுதியிருப்பேன். சில பக்கங் கள் பேணு மையால் களங்கப்படாமலே இருக்கும். ஆனல், இப்பொழுது பக்கம் முழுவதையும் எழுதி கிரப்பினேன் டைரியில் அப்படி எழுத என்ன இருக்கிறதென்று கேட் கலாம். டைரியில் எதைத்தான் எழுதக் கூடாது? பேனு வாங்கின சந்தோஷத்தை எழுதினேன். யார் யாரைச் சந்தித் தேனென்று யோசித்து எழுதினேன். அவர்களோடு பேசின விஷயங்களேக்கூட யோசித்து கினேவுக்குக் கொண்டு வந்து எழுதினேன். அப்புறம் பக்கம் முழுவதும் நிரம்புவ வதற்கு என்ன தடை ? . . . .

எழுதிய பிறகு பார்த்தால், இனிமேல் கான் ஒழுங்காக முறை பிறழாமல் எழுத்து வேலையை நடத்திவருவேன் என்ற நம்பிக்கையும் பெருமிதமும் உண்டாயின.

யாரோ அநுபவசாலி சொன்னதைக் கேட்டிருக் கிறேன். பேனவை. இரவல் தரக்கூடாதாம். அப்படித் தந்தால் பேனக் கெட்டுவிடுமாம். வேருெருவர் எழுதிய பிறகு நம்மிடம் வந்தால் அதல்ை எழுதும் எழுத்து ம்ே முடையதாக இராதாம். இந்த் எச்சரிக்கையை நான் கவன்த் துக்குக் கொண்டு வந்தேன். யாருக்கும் கொடுக்காமலே இருந்து வந்தேன். - - - . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/31&oldid=685938" இலிருந்து மீள்விக்கப்பட்டது