பக்கம்:சுதந்திரமா.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O சுதந்தரமா!

பெர்னர்ட் ஷாவைப் போலக் குறைந்தது ஆறு பக்கம் எழுதிலுைம் மாசத்துக்கு நூற்றைம்பது பக்கம், வருஷத்துக்கு ஆயிரத்து எண்ணுாறு பக்கம் ஆகிவிடுமே! அடேயப்பா! எவ்வளவு பெரிய காரியம்! சிறிய முயற் சியினல் பெரிய பலன். டாக்டர் வந்தவுடன் நல்ல டானிக்காகக் கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய நேரத்தை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும். யாரோடும் வீணுகப் பேசி நம்முடைய ஆயுளைக் குறைத்துக் கொள்ளக் கூடாது. - இப்படி மிகவும் உருப்படியான திட்டங்கள் உருவாகின்றன.

இது ஒரு நிலையில் நிகழும் நிகழ்ச்சி. - தர்மா மீட்டரில் பாதரலம் கொஞ்சம் அதிக துாரம் பிரயாணம் செய்தால், நம்முடைய மனசும் கெடுக் துாரம் பிரயாணம் செய்கிறது. நாம் நம்மையே மறந்து விடு கிருேம். ஜுர தேவதை தன்னுடைய விமானத்தில் நம்மை எங்கெங்கெல்லாமோ அழைத்துச் செல்கிறது.

பத்து வருஷத்துக்கு முன் காலமான நம்முடைய தாத்தாவிடம் கொண்டு போய் விடுகிறது. அவர் தம் மூக்குக் கண்ணுடியைக் கழற்றி விட்டு நம்மை வரவேற்று. இனிமையாகப் பேசுகிருர் பாதி பேசிக் கொண்டிருக்கும். பொழுதே ஜூர தேவதையின் விமானம் நம்மைப் பிச்சுக்கு அழைத்துக் கொண்டு வந்து விடுகிறது. அந்தப் பிச்சிலே இருந்தாற் போலிருந்து நம்முடைய ஆபிஸ் அறையை நிர் மாணித்து விடுகிறது. - - -

பாண்டு வாத்தியம், அதோடு காபிக்கெர்ட்டை அரைக்கும் ஒலி எருமை மாடு, அதற்கு அருகில் ஏரோப்ளேன்; அதி சுந்தரமான தோற்ற முடைய பெண், அவளுக்கு அருகில் உருவம் இன்னதென்றே தெரியாத பயங்கரமான மனிதன்-இப்படியாகப் பல கதம்பக் காட்சிகளை நாம் காண்கிருேம். . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/38&oldid=685945" இலிருந்து மீள்விக்கப்பட்டது