பக்கம்:சுதந்திரமா.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் கையே

அவரவருடைய சொந்தக் காரியங்களை அவரவர் செய்து கொள்வது மிகவும் நல்லது என்று பெரியவர்கள் சொல்கிருர்கள். இந்தச் சொந்தக் காரியம் என்பதற்கு எது எல்லேயென்று நிர்த்தாரணம் செய்பவர் யாரும் இல்லை. நாமே சாப்பிட வேண்டும், நாமே வேட்டி கட்டிக்கொள்ள வேண்டும், காமே பல் தேய்க்கவேண்டும். இந்த விஷயங் களில் தன் கையே தனக்குதவி என்பது மிகவும் சரி. ஆனல் மற்றக் காரியங்களைப் பற்றி யோசிக்கும் போதுதான் எது தானே கவனித்துக்கொள்ள வேண்டியது என்ற விஷயத் தில் அபிப்பிராய பேதம் எழுகிறது. . . . . .

எண்ணெய் தேய்த்து ஸ்நான்ம் செய்கிருேம். இது நம் முடைய சொந்தக் காரியம். இதை நாமே செய்து கொள்ள வேண்டுமென்றுதான் தோன்றுகிறது. ஆனல், சிலர் பிற ருடைய கையை எதிர்பார்க்கிருர்கள், எண்ணெய் தேய்க் கும் வேலைக்காரனுடைய கையைத்தான் சொல்கிறேன். கூடிவரம் பண்ணிக்கொள்வதற்குப் பிறர் கையை எதிர் பார்ப்பதைவிடத் தானே பண்ணிக் கொள்வது இந்தக் காலத்து கர்கரிகம் ஆகிவிட்டது. பல் தேய்ப்பதும் கூடிவரம் பண்ணிக்கொள்வதும் தானே செய்து கொள்ளும் சொந்த வேலைகள் ஆகிவிட்டன. - .

இதெல்லாம் இருக்கட்டும். அவரவர் துணியை அவ ரவர் துவைத்துக் கொள்வது அவசியமா இல்லையா? இதைப் பற்றித்தான் முக்கியமாகச் சர்ச்சை செய்ய எண்ணு கிறேன். பணக்காரர் வீடுகளில் துணிகளேத் துவைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/40&oldid=685947" இலிருந்து மீள்விக்கப்பட்டது