பக்கம்:சுதந்திரமா.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் கையே 33

ஆட்கள் இருக்கிருர்கள். பணக்காரர்களே காம் உதாரண மாகக் கொள்ளக்கூடாது. அவர்களுக்கு ஒன்றுகூடச் சொந்தமாகச் செய்துகொள்ளாமல் இருக்தால் சந்தோஷ மாக இருக்கும். காலேயில் எழுந்தவுடன் படுக்கையை வேலை யாள் சுருட்டி வைக்கவேண்டும். பல்லே ஒருவர் தேய்த்து விடவேண்டும். வேலைக்காரன் வெங்ைேர மேலே விட வேண்டும். ஒருவன் உடம்பைத் தேய்க்க வேண்டும். பிறகு வேலைக்காரனே உடம்பைத் துடைத்து ஆடையை உடுத்த வேண்டும். சின்னஞ் சிறு குழந்தை எப்படி எல்லாக் காரியங்களேயும் பிறரைக் கொண்டு செய்து கொள்ளு கிறதோ அப்படி இருக்கவேண்டுமென்பதே பணக்காரர்கள் ஆசை. அவர்கள் தங்கள் துணிகளைத் தாங்களே துவைத் துக் கொள்ளவாவது குடியே கெட்டுப் போகாதா?

நடுத்தர வாழ்க்கையை உடையவர்கள் என்று இப் போது ஒரு வகுப்பினர் உண்டாகியிருக்கிருர்களே, அவர்கள் என்ன செய்கிருர்கள்? அவர்கள் தங்கள் துணி களத் தாங்களே துவைத்துக் கொள்வதில்லை. அதற்குக் காரண்ம் அவர்களுடைய சோம்பல் அன்று செலவிடும் யோக்கியதையும் அன்று உண்மையில் அந்த விஷயத்தில் அவர்களுக்குச் செலவே ஏற்படுவதில்லை. அவர்களுடைய தர்ம பத்தினிமார் அந்த வேலையைச் செய்து விடுவார்கள். அவர்களை வற்புறுத்துகிறவர் யாரும் இல்லை. யாரோ சில பெண்மணிகள் இந்த வழக்கத்தை ஏழைகளிடமிருந்து முதல் முதலில் கற்றுக் கொண்டிருக்கவேண்டும். அல்லது ஏழைகளாக இருந்து, டுத்தர வகுப்புக்கு உயர்ந்தவர் களாக இருக்கவேண்டும். அவர்களைப் பார்த்து மற்றவர். களும் அப்படிச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். நாளடை வில் இது வழக்கமாகி விட்டது.

வழக்கமாகிவிட்டால் அதில் உண்டாகும் விருப்பம் மறைந்துவிடும்; சில சமயங்களில் அருவருப்புக் கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/41&oldid=685948" இலிருந்து மீள்விக்கப்பட்டது