பக்கம்:சுதந்திரமா.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சுதந்தரமா!

ஏற்படும்; தலை விதியே என்று செய்யவேண்டிய கிலே வந்துவிடும். முதலில் தம்முடைய துணியைத் துவைக்கத் தம் காதலிமார் முற்பட்டபொழுது வேண்டாம் என்று தான் கணவன்மார் தடுத்திருக்கவேண்டும். அவர்கள் வற்புறுத்தவே தடுக்காமல் இணங்கி யிருப்பார்கள். நாளாக ஆக அது வழக்கமாகி விட, இப்போதெல்லாம் அது சமையல் வேலையைப் போலப் பெண்களுக்கே உரியது என்ற எண்ணம் வந்து விட்டது. நாலு காளானலும் அவர் கள் துவைக்கட்டும் என்று போட்டு வைப்பார்களேயன்றி, ஒரு நாள் நாமும் துவைக்கலாமே என்று தோன்ருது.

இதெல்லாம் பட்டண வாசத்துச் செய்தி. கிராமங்களில் வேறு கிலேயைக் காணலாம். அதுவும் ஆற்றங்கரையாக இருந்து விட்டால் அவரவர் துணியை, அவரவர் துவைத்துத் கட்டி மகிழ்வார்கள். r -

துணி துவைப்பதே ஒரு கலே. இந்தக் கலையின்பத்தை கித்தம் சலவைத் துணியை உடுக்கும் ஜனங்கள் அறியார். காவேரி மணலில் ஊற்றுப் போட்டுத் துவைத்து உலர்த்தி வைத்து அந்த ஆடையை உடுத்துக் கொள்ளும் இன்பத்துக் குச் சமானமாக எதைச் சொல்லலாம்? தானே பட்டை போட்டு நூல் நூற்று அந்த நூலால் தானே தறி கெய்து உண்டாக்கிய ஆடையை ஒருவன் கட்டிக் கொண்டால் எத்தனே இன்பம் இருக்கும்? அதை வேண்டுமானல் ஒப்புக் கூறலாம. - - . . . . துணி துவைக்கப் புதிதாக ஊற்றுப் போடுவதுகூட ஒரு கலைதான் அல்லது வேட்டி துவைக்கும் கலையில் முதல் அங்கம் என்று சொல்லலாம். அதற்கென்று மரத் தால் செய்த ஒரு கருவி உண்டு. ஊற்றுப்பட்டை என்று சொன்னல் துவைத்தற் கலையைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும். பட்டணவாசிகளுக்கு இஸ்திரிப் பெட்டி எவ் வளவு சுலபமாகத் தெரியுமோ, அவ்வள்வு சுலபமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/42&oldid=685949" இலிருந்து மீள்விக்கப்பட்டது