பக்கம்:சுதந்திரமா.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

தன் கையே 3

ஊற்றுப் போட்டு ஆடை துவைப்பவர்களுக்கு ஊற்றுப் பட்டை தெரியும். நேரம் இருந்து மனமும் இருந்தால் இரண்டு ஊற்றுப் போட்டு ஒர் ஊற்றில் துவைத்து விட்டு மற்ருேர் ஊற்றில் அலசுவார்கள். நன்ருகத் துவைத்துப் பிழிந்து முறுக்குக் கலையாமல் வேறு ஊற்றில் போட்டுவிட் டால் அந்த முறுக்கு மெல்ல மெல்லப் புரிவிட்டுத் தூய தண்ணிரில் மிதப்பதைப் பார்க்க வேண்டுமே! நல்ல கவிஞ கை இருந்தால் அந்தக் காட்சியை வருணித்து ஒரு பாட்டே

பாடிவிடுவான்.

தோய்க்கும் போது தெரியும் மனிதனுடைய சுபாவம். ஏதோ கடன் இழவுக்குத் தோய்ப்பவகை இருந்தால் தப்புத் திப்பென்று கல்லிலே மோதுவான். துவைப் பதிலே இன்பங் காணுபவர்கள் அப்படிச் செய்யமாட் டார்கள். படார் படார் என்ற சத்தமே அவர்கள் தோய்க் கும் போது வராது. சலக் சலக்கென்றுதான் கேட்கும். துவைக்கும் போதே ஒரு சுண்டு சுண்டினல் ஆடையி லுள்ள அழுக்கெல்லாம் நெளிந்து சுருண்டு நுனியிலே போய் கிற்கும். பிறகு துவைத்தால் பளீரென்று. சித றுண்டு போகும். - .

பெரிய கல்லேப் பிளக்கும் கல் தச்சனுக்கும் சிறிய கல்லில் விக்கிரகம் செதுக்கும் சிற்பாசாரிக்கும் வித்தியாசம் உண்டு. வேட்டி துவைக்கும் விஷயத்தில் கல்லே மோது கிறவன் கல் தச்சனைப் போன்றவன். குலுக்கி மடித்து மெல்லச் சுண்டித் தோய்க்கிறவன் சிற்பாசாரியைப் போன் றவன். துவைப்பதைக் காட்டிலும் இரண்டு மூன்று அடி அடித்தவுடன் நுனியைச் சுருட்டிக் கசக்குவதில்தான் இருக்கிறது. சூட்சுமம், கசக்கிப் பிறகு எடுத்து உதறினல் நுனியில் வந்து சேர்ந்த அழுக்குப் போகும் பிறகு தண் னில் அலசினல் மிச்சம் இருக்கிற கொஞ்ச நஞ்சம் அழுக் கும் போய்விடும். - , r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/43&oldid=685950" இலிருந்து மீள்விக்கப்பட்டது