பக்கம்:சுதந்திரமா.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - சுதந்தரமா!

இந்தக் கலையில் பழங்காலத்து வைதிகப்பிராமணர்கள் தேர்ந்தவர்கள். அவர்களுடைய தூய ஆடைகள் சீக்கிரத் தில் அழுக்காவதில்லை; கிழிவதும் இல்லே.

தன்னுடைய ஆடையைத் தானே துவைத்தால்தான் அதை அழுக்காக்கக்கூடாது என்ற உணர்ச்சி வரும். வண்ணனுக்குப் போட்டுக்கொள்ளலாம் என்ற தைரியத் தால் நாம் ஆடையை விரைவிலே சாணிச் சுருணேஆக்கிவிடு கிருேம். அதனல் எவ்வளவு மனித சக்தி வீணுய்விடுகிற தென்று நாம் கினைத்துப் பார்ப்பதில்லை.

வேட்டி துவைத்த பிறகு அதைப் பிழிந்து மடித்துத் தட்டிக் கொட்டிக் கொடியில் உலர்த்தவேண்டும். எல்லோ ருக்கும் மடியை உலர்த்தத் தெரியும் என்று நினைத்துவிடா தீர்கள். இரண்டு தலைப்பையும் ஒன்ருகச் சேருமாறு: உலர்த்துவதற்குப் பழக்கம் வேண்டும். முன்னலேயே அதற்கேற்றபடி கொசுவிக்கொள்ள வேண்டும். கொடி யிலே போட்டுவிட்டு மடிக்கோலே அசைத்து ஆட்டிப் பயன் இல்லை; கழுத்துத்தான் வலியெடுக்கும். - இப்படித் துவைத்து உலர்த்தின ஆடையை மறுநாள் காலையில் எடுத்து அணிந்தால் நமக்கு எத்தனே ஆனந்தம் உண்டாகிறது தெரியுமா ? மொட மொடவென்று இருக் கும். பட்டுத் துணியைக் கட்டிக்கொண்டால்கூட அவ் வளவு ஆனந்தம் உண்டாகாது. -

ஆடை அப்பழுக்கில்லாமல் இருப்பது மட்டும் அல்ல; இதல்ை நமக்கு உடற்பயிற்சி ஏற்படுகிறது. கன்ருகத் துவைக்கிருேம் அதல்ை உடம்பு வளைகிறது; பிறகு ரோடு கிருேம் கவாத்துப் பழகவேண்டிய அவசியம் இல்லாமலே துர்ய்மையும் பலமும் ஒருங்கே நமக்குக் கிடைக்கின்றன.

தன் துணியைத் தானே துவைக்கவேண்டியது கடமை என்று உணர்ந்தவர் பெரியோர். பழங்காலத்தில் வாழ்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/44&oldid=685951" இலிருந்து மீள்விக்கப்பட்டது