பக்கம்:சுதந்திரமா.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படாத காலிலும் படும் A9

யும் ” என்று சொல்லிப் போய்விட்டாராம். அந்த மாதிரி பட்ட காலிலேதான் படும் என்று சொல்லாமற் போனர் களே, அதற்காகச் சந்தோஷப்பட வேண்டும்.

தினமும் நாம் எங்கெங்கோ கடக்கிருேம். மேட்டிலும் பள்ளத்திலும், சரளைக்கல் பரப்பின பாதையிலும் தார் ரோட்டிலும் கடக்கிருேம். வாசற்படியில் ஏறுகிருேம்: புறக்கடையில் இறங்குகிருேம். அப்பொழுதெல்லாம் நம்முடைய காலில் கண் இருக்கிறதா என்ன, ஒன்றும் படாமல் இருக்க ? காலிலே காயம் பட்டுவிட்டால் மட்டும் அந்தக் கண் கெட்டுப்போய், பட்ட காலிலே பட்டுக் கொண்டே இருக்கிறதா? யோசித்துப் பாருங்கள். நமக்குக் கால் இருக்கிறவரையில், நாம் அதைக்கொண்டு நடக்கிற வரையில், எங்கேயாவது பட்டுக் கொண்டேதான் இருக்கும். ஆனல் அப்படிப் படும் போதெல்லாம் நாம் அதைக் கவனிக்கிறது இல்லே. நம்முடைய மூளைவரையில் அந்தச் செய்தி எட்டுவதில்லை. எங்கேயோ ஒரு சின்னக் கிரா மத்தில் யார்ாவது செத்துப்போன சமாசாரத்தைப் போல ஒருவரும் அறியாமல், காலோடே போய்விடுகிறது.

ஆனல் கால் எங்கேயோ வேகமாக கடந்து இடித்துக் கொண்டு ஒரு புண்ணே வாங்கிக் கொள்கிறதென்ருல், அதற்குத் தனிக் கெளரவம் வந்துவிடுகிறது. அகாயாசமாக நடக்கிறது போய் ஒய்யாரமான நடனம் செய்கிறது. நம்முடைய காலிலே பகவான் கண்வைக்காத தோஷத்தினுல் காயம் பட்டுவிட்டால் மற்றவர்களுக்கு என்ன வந்தது? அதற்குப் பரிகாரம் செய்வது போல எல்லோருடைய கண்களும் நம்முடைய காலிலே வந்து பதிகின்றன. சிநேகிதர்களில் ஒருவர் பாக்கியில்லாமல் காலப் பார்த்து விடுகிரு.ர்கள்; "காலிலே என்ன காயம்?" என்று அதுதாபத்தோடு விசாரிக்க ஆரம்பித்து விடுகிருர்கள். நம்மைப்பற்றி, நம் உத்தியோகத்தைப்பற்றி, நமக்கு

4. - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/57&oldid=685964" இலிருந்து மீள்விக்கப்பட்டது