பக்கம்:சுதந்திரமா.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படாத காலிலும் படும் 51

படாத காலுக்குத்தான் இருக்க வேண்டும். வாழ்க்கையில் எத்தனை விதமான துன்பங்கள் வந்தாலும் அலகூதியமாக ஏற்றுக்கொண்டு மனே தைரியத்தோடு புன்னகை பொலியும் முகமுடையவனகி விளங்கும் தீரனையல்லவா நாம் போற்ற வேண்டும்? போகும் போதும் வரும்போதும் கல்லேயும் மண்ணையும் மிதித்து மோதி, மரத்தையும் மட்டையையும் திண்டி வேகமாக கடக்கும் கால அந்த வீரனுக்குச் சமானமாகத்தான் சொல்ல வேண்டும். அதன் மேல் எவ்வளவோ பொருள்கள் படுகின்றன; ஆனல் அதைப் பிரமாதமாக விளம்பரப் படுத்திக்கொள்ள அதற்குத் தெரிவதில்லே. -

ஆகவே பட்ட காலிலே படும்’ என்ற பழமொழி யோடு, “படாத காலிலும் படும்” என்ற புதுமொழியையும் கினேத்துப் பாருங்கள். படாத காலில் பட்டால் அது நடப் பவன் நடைக்கு இடையூறு உண்டாக்குவதில்லே என்ற தத்துவத்தையும் ஆராய்ந்து பாருங்கள்.

பட்ட காலிலே படுவதை நாம் உணர்கிருேம், படாத காலிலே படுவதை காம் உணர்வதில்லை. பணக்கார வீட்டுப் பிள்ளைக்குத் தும்மல் வந்தாலும் டாக்டருக்குத் தெரிந்துவிடுகிறது. ஏழைத் தொழிலாளியின் குழந்தைக்கு ஜூரம் வந்தாலும் அதன் தாய்க்கே முதலில் தெரிவதில்லை. வாழ்க்கைத் தத்துவத்தை ஒட்டித்தான் பட்ட காலும், படாத காலும் நடக்கின்றன. எனவே, "படாத காலிலும் படுவது உண்டு” என்று காம் தெரிந்து கொள்வது இல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/59&oldid=685966" இலிருந்து மீள்விக்கப்பட்டது