பக்கம்:சுதந்திரமா.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளம்பர ஆசை . 67

இந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய புஷ்பக விமான யாத்திரையைப் பற்றிச் சொல்லாமல் இருந்தால் மகா பாவம் என்று என் மனத்திலே ஒரு துடிப்பு உண்டா யிற்று. 'பாருங்கள் பகவானுடைய பெருமையை. அன்று அவர் ஏறி வந்த புஷ்பக விமானத்தில் இன்று நாமும் ஏறும்படியாகக் கிருபை பண்ணியிருக்கிருர் என்றேன்.

நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?" என்று கண்பர் கேட்டார். - . "இப்போது ஆகாய விமானப் பிரயாணம் வந்திருக் கிறதே. இந்த விஷயம் நம்முடைய முன்னேர்களுக்குத் தெரிந்ததுதான். புதிதாக வந்தது அல்ல. விமானத்தில் நான் போனபோது எவ்வளவு சுகமாக இருந்தது. தெரியுமா ?” - -

  • அப்படியா! நீங்கள் விமானத்தில் போயிருக் கிறிர்களா?” . - ; . '.

அதற்குமேல் நான் ஒரு சொற்பொழிவே செய்து விட் டேன் என்று சொல்லவா வேண்டும்? -

டில்லியிலிருந்து இரண்டு நாள் ரெயிலில் கஷ்டப் பட்டுக்கொண்டு ஒருவர் வந்தார். அவரைக் கண்டேன். இரண்டு நாளாகத் துரக்கம் இல்லே அடேயப்பா என்ன கூட்டம் ' என்ருர் அவர்.

தெரியாமலா விமானத்தில் பிரயாணம் செய்கிருர் கள்?’ என்று நான் முகவுரையைத் தொடங்கினேன். -

எல்லாராலும் விமானத்தில் போகமுடியுமா?" என்று கேட்டார் அவர். அந்தக் கேள்விக்கு விடை கூறுவது என் பொறுப்பு அல்லவே! பொருளாதார நெருக்கடி, பெட்ரோலின் விலை, விபத்துக்கள், விமானப் பயணத்தைத் தேசீய மயமாக்குதல் என்று விமானப் பிரயாண சம்பந்தமாகப் பத்திரிகைகளின் மூலம் அறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/75&oldid=685982" இலிருந்து மீள்விக்கப்பட்டது