பக்கம்:சுதந்திரமா.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - சுதந்தரமா !

பாடி அதைச் சொல்லலாம். அதையாவது கேட்கிருர்களா, பார்ப்போம் என்று எண்ணினர். தமக்குத் தெரிந்த பேர் வழிகளின் பெயர்களைத் தனியே குறித்துக் கொண்டார். ஒவ்வொருவர் மேலும் பாடல்களைப் பாடிக் கொண்டு போய்ச் சொல்லிக் காட்ட வேண்டுமென்று திட்டம் போட்டார். முதலில் ஒருவர்மேல் பாடிக்கொண்டு போளுர் அவர் இவர் முகத்தைக்கூட ஏறிட்டுப் பார்க்க வில்லை. பணம் பிடுங்க வருகிருன் என்று மூஞ்சியைக் கடு கடுப்பாக வைத்துக்கொண்டார். பாவம்! புலவர் ஏமாந்து போளுர் மறுபடியும் வேறு ஒருவரைப் பாராட்டிப் பாடிக் கொண்டு அவரைப் போய்ப் பார்த்தார். அங்கும் அவருக்கு வரவேற்பு இல்லை. அவருடைய தலயெழுத்து, ரஸிகர் களே அவர் கண்ணுக்கு அகப்படவில்லை. போன இடங் களிலெல்லாம் அவர் கண்டவை கடுகடுத்த முகமும், வெடு வெடுத்த பேச்சுமே. இப்படிப் பாடின பாட்டுக்களை எழுதி வைத்த எடுகளே யெல்லாம் கிழித்துப் போட்டார். எத்தனே ஏடுகள்! எழுத்தானி எத்தனே விதம் உண்டோ அத்தனே யும் வாங்கித் தேய்த்ததுதான் மிச்சம். ஒரு ரஸிகனேக் கூடக் காணவில்லை. பணம் கொடுக்க வேண்டாம்; "பாட்டு கன்ருக இருக்கிறது" என்று ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா? அந்தப் பாவிகளுக்கு அந்த விஷயத்தில் காக்குச் சுளுக்கிக்கொண்டது.

இப்போது புலவருக்கு ஞாைேதயம் உண்டாயிற்று. "இனிமேல் எந்த ரவிகரைப்பார்க்கலாம்?' என்று யோசித் தார். "அருணதள பாதபத்மம் அதுகிதமும்ே துதிக்க அரிய தமிழ்தான் அளித்த மயில் வீரா" என்ற திருப்புகழ் அவர் நினைவுக்கு வந்தது. பழனியாண்டவன்தான் பரம ரஸிகன் என்ற தீர்மானத்துக்கு வந்தார். நேரே பழனிக்குப் போனர். "ஆண்டவனே! நான் ரவிகர்களைத் தேடி அலேக் தது போதும். இனி தோன் கதி" என்று ஆண்டவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/82&oldid=685988" இலிருந்து மீள்விக்கப்பட்டது