பக்கம்:சுதந்திரமா.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை աաiմւ, -

இழந்தை வளர்ப்பைப் பற்றி ஒரு வார்ம் விடாமல் சில புத்தகங்களைப் படித்தேன். என்ன அழகாக எழுதி யிருக்கிருர்கள்! 'குழந்தைகளைத் திட்டக்கூடாது; வையக் கூடாது; அன்பினல் வழிக்குக் கொண்டு வரவேண்டும்; பயப்படுத்தக் கூடாது' என்றெல்லாம் தக்க காரணங்களைத் தெளிவாக எடுத்துக் காட்டி அவர்கள் எழுதியிருப்ப வற்றைப் படித்த பிறகு, பல காலமாக கான் செய்து வரும் தவருண காரியங்களே நினைத்து வருத்தப்பட்டேன். 'போனது போகட்டும்; இனிமேலாவது குழந்தையின் உள்ளத்தை அறிந்து அன்பாக நடந்துகொள்ளவேண்டும்” என்று தீர்மானித்துக்கொண்டேன். . . . .

இந்தத் தீர்மானம் செய்த அன்று மாலே நான் காரியா லயத்திலிருந்து வரும்போது கையில் ஒரு புதிய பத்திரி கையை எடுத்து வந்தேன். அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிகை அது. அப்படிச் சொன்னலே போதும் அத லுடைய படக் கவர்ச்சியைப் பற்றியோ, வண்ண் ஒவியங் களேப்பற்றியோ நான் தனியே எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பத்திரிகையை மேஜையின் மேல் வைத்துவிட்டுக் கை கால் கழுவிக்கொண்டு வந்தேன். அதற்குள் அந்தப் பத்திரிகை என் கடைசிக் குழந்தையின் கண்ணில் பட்டுவிட்டது. அட்டைப் படம் தன் வண்ணங், களேயெல்லாம் காட்டி வா வா என்று அழைக்கும்போது அவன் சும்மா இருப்பான? அந்தப் பத்திரிகையை எடுத்து, உட்கார்ந்து தன் காலே நீட்டிக்கொண்டு துடையின்மேல் வைத்துப் புரட்டிக் கொண்டிருந்தான். மூன்று வயசுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/84&oldid=685990" இலிருந்து மீள்விக்கப்பட்டது