பக்கம்:சுதந்திரமா.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சுதந்தரமா!

என்று எண்ணி, அடுத்தடுத்துத் தம்முடைய உரைகளே கிரப்பி வந்தால், அவரை அடுத்தபடி அவைத் தலைவராக அழைப்பதற்கே அஞ்சுவார்கள்.

சிலர் அவைத் தலைவர்ாக வந்துவிட்டாலே மேதாவி யென்று தம்மை கினைத்துக் கொள்கிருர்கள். சொற்பொழி வாளர் பேச்சில் ஏதாவது குற்றம் கண்டு பிடித்தால்தான் தம்முடைய கெளரவம் கிலேகிற்கும் என்று நினைத்துக் கொள்கிருர்கள். இந்தப் பழக்கத்தை வளர விட்டுச் சில அறிஞர்கள் சொற்பொழிவாளர்களுடைய வெறுப்புக்கு ஆளாகி யிருக்கிருர்கள். சிலர் தமக்குப் பின்னலே பதில் சொல்ல ஆள் இல்லை என்ற தைரியத்தால் சொற்பொழி வைப் பற்றி எதையாவது உளறிக் கொட்டிவிடுவார்கள். அவ்வாறு ஏற்பட்ட சில சமயங்களில் நன்றி கூறவந்தவர் அவரை இறக்கி விடுவதும் உண்டு. . メ படித்தவர் அவைத் தலைவராக இருந்தால் முக்கிய மாகச் சொற்பொழிவாளர்கள் கூறியவற்றைத் தொகுத் துத் தந்து, அவர்கள் கூறிய சில விஷயத்தைப் பின்னும் வற்புறுத்துவதைப்போலத் தாம் சொல்ல வேண்டியவற் றைச் சொல்வார்கள். இந்த வகையில் காலஞ்சென்ற ஞானியார் சுவாமிகள் அசகாய குரர். சப்பையாக, ஒருவர் ஒரு பொருளைப் பேசிவிட்டார் சரக்கே இல்லை. தலைவர் பின்னுரையில் அற்புதமாக அதே விஷயத்தைப் பேசி விட்டு, ' இவற்றை யெல்லாம் கினைப்பூட்டுவதாக இருந்தது அன்பருடைய சொற்பொழிவு” என்று நாகரிக மாக முடிப்பார். அது எத்தனே அழகாக இருக்கும்! அதை விட்டுவிட்டு, அவர் பேசவேண்டிய பொருளைப்பற்றி ஒன்றுமே பேசவில்லை. இப்படிப் பேசுவது தவறு. கான் அதுபற்றிச் சொல்கிறேன் கேளுங்கள்' என்று அவைத் தலைவர் ஆரம்பித்தால் அவரை நாகரிகம் தெரிந்த மனிதர் என்று எப்படிச்சொல்லமுடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/90&oldid=685996" இலிருந்து மீள்விக்கப்பட்டது