பக்கம்:சுதந்திரமா.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவைத் தல்வர் 83

மிகவும் கடுமையாக, அவையினர் உள்ளம் புண்படும் படியாக ஒருவர் பேசிவிடுகிருர். அத்தகைய சமயங்களில் அவைத் தலைவர்பாடு திண்டாட்டமாகிவிடும். சபையினர், கைகொட்டிப் பேச்சை நிறுத்தப் பார்ப்பார்கள். சீட்டுகள் வரும். தலைவ்ர் கடியாரத்தைத் திருப்பி வைப்பார். பேச் சாளர் முகத்தை அடிக்கடி பார்ப்பார். இந்தக் குறிப்பை யெல்லாம் சொற்பொழிவாளர் கவனிக்காவிட்டால், விரை வில் நிறுத்துங்கள்' என்று எழுதிக் கொடுப்பார். சொற் பொழிவாளர் நிறுத்திய பிறகு அவர் கூறிய அபத்தங் களுக்கெல்லாம் விடை சொல்லவேண்டுமே! சபையிலுள்ள வர்கள் துடியாய்த் துடிப்பார்கள். அவைத் தலைவர் ஆற்ற வில்லாதவராக இருந்தால் மேடையே போர்க்களமாகி விடும். ஆனல் அவர் தக்க அறிவும் சாமர்த்தியமும் உடையவராக இருந்தால் அவையினருடைய ஆத்திரத்தை அடககமுடியும. - -

பின்னுரையில் சொற்பொழிவாளரை நேரே தாக்கு வது சிறந்த தலைவருக்குரிய இலக்கணம் அன்று. ' கம் முடைய நண்பர் தம்முடைய கருத்துக்களே எடுத்துச் சொன்னர் ஆல்ை வேறுபட்ட கருத்துக்களும் உண் டென்பதை அவர் அறிந்திருப்பார் சபையினருக்கு மற்ருெரு சாராருடைய கருத்துக்களும் தெரிந்தால் நலமாக இருக்கும்" என்று தொடங்கிச் சொற்பொழிவாளரின் கூற்றுக்களிற் சிலவற்றிற்கு நயமாகச் சமாதானம் சொல்லி, இந்த விஷயங்களே யெல்லாம் அறிந்து, 5ண்பர் சொன்னவற்றை இவற்ருேடு ஒப்பிட்டு நோக்கவேண்டும். இரு வேறு கட்சிகளையும் தெரிந்து கொண்டால்தான். உண்மை புலப்படும்" என்று முடித்தால் சபையின்ர் கோபமும் தணியும்.

சில சொற்பொழிவாளர்கள் வேண்டுமென்றே தலே வரைக் குறிப்பாக இழித்துப் பேசுவார்கள். வேறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/91&oldid=685997" இலிருந்து மீள்விக்கப்பட்டது