பக்கம்:சுதந்திரமா.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டுக் கணக்கு . 8?

போகிருன், சிநேகிதளுேடு ஊர் சுற்றிவிட்டு வருகிருன். அவனுக்குக் கொடுத்த ரூபாய்க்குக் கணக்குக் கேட்பதை விட அப்படியே, இன்னர் செலவு இரண்டு ரூபாய் என்று எழுதிவிடுவது உத்தமம். காலணு, ஐந்தணு மிச்சம் இருக் கலாம். அதை அவனுகக் கொடுத்தால் வாங்கி வைத்துக் கொள்ளலாம் ; இல்லாவிட்டால் செலவுக் கணக்கில் எழுதி விடலாம். இதை விட்டுவிட்டு அவனிடம் கணக்குக் கேட்டு, மிச்சத்தைக் கீழே வைக்கச் சொல்லித் தடபுடல் படுத்தினல், எண்டா காம் வெளியிலே போனேம்" என்ற வேதனை அந்த இளைய நெஞ்சிலே புகுந்துகொண்டு உளேச்சல் கொடுக்கும். வீட்டுக் கணக்குப் பெரிதா, அவன் சந்தோஷம் பெரிதா ?

கணக்கு என்ருல் எல்லாம் வந்துதான் ஆகவேண்டும் என்பது உண்மை. பையன் செலவழித்த பணத்துக்குக் கணக்குக் கேட்கிருேம். அவன் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக் கொண்டு சொல்வது எளிதன்று. அப்படிச் சொன்னலும் சில சமயங்களில் உண்மையான கணக்காக இருக்காது. 'கிலக்கடலை வாங்கிச் சாப்பிடாதே" என்று குழந்தைகளுக்கு நாம் சொல்லி யிருப்போம். பையன் கடற் கரைக்குப் போய் நண்பர்களோடு உல்லாசமாக இருந்து விட்டு வருவான். அங்கே சுடச்சுட நிலக்கடலையை அரை யளுவுக்கோ, முக்காலணுவுக்கோ வாங்கித் தின்றிருப் போன். 'கிலக்கடலை வாங்கக் கூடாது' என்று உத்தரவிட் டிருக்கும் நம்மிடம், நிலக்கடலை அரையளு " என்று கணக்குச் சொல்வான சொல்லமாட்டான். வாழைப் பழம் அரையணு ' என்று மாற்றிச் சொல்வான். காம் வாழைப்பழம் வாங்கி வந்தால் கண்ணெடுத்தும் பார்க் காதவன் அவன் என்பது நமக்கு நன்ருகத் தெரியும். 'ஏண்டா, உனக்கு வாழைப்பழந்தான் பிடிக்காதே?" என்று கேட்டால், இல்லை, பேரிக்காய் வாங்கினேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/95&oldid=686001" இலிருந்து மீள்விக்கப்பட்டது