பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== 轉 அகில இந்திய ரேடியோவின் திருச்சி நிலேய இயக் குனர் அவர்களே, பெரியோர்களே, தாப் மார்களே ! இன்று நாம் பதின்ைகாவது சுதந்திர தின விழாவின் கொண்டாட்டத்திற்காகக் கூடியிருக்கிருேம். சுதந்திர தினம் எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் பெருமையையும் கொடுக்கக்கூடிய நாளாகும். இக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது பற்றி நான் பெருமை அடைகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் பெருமையடைய காரணங்கள் பல உள்ளன. அக்கா வந்து கொடுத்த, சுக்கா மிளகா சுதந் திரம் கிளியே ' என்று இக்காலத் தமிழ்க் கவிஞர் ஒருவர் அழகாகக் கேட்கிரு.ர். உண்மைதானே ! காசு பணம் கொடுத்து, மளிகைக் கடையிலே சுதந்திரத்தை வாங்க முடியுமா? அல்லது ஆயிரம், பதினுயிரம்கொடுத் தாவது, நகைக்கடையிலே பொன்னேப்போல, வைரத் (திருச்சி லாதுெ. லயததா 14-8-1960 அனறு ஏற்பாடு செய்த சுதந்திர தின விழா தொடக்க வுரை)