பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97' கருவிகளின் துணையோடு பயிர் செய்கிருர்கள். இரசாயன உரங்களைப் பயன்படுத்துகிருர்கள். சேதாரம் இல்லாமல் சாகுபடி செய்கிருர்கள். கொள்ளை விளைச்சல் காண்கிரு.ர்கள். பயன் என்ன ? உயர்ந்த வாழ்க்கைத் தரம் , பலபேருக்கு. அமெரிக்க மக்கள் உடல் வலியும் உள்ளவலியும் உடையவர்கள். சுறுசுறுப்பானவர்களும் கூட. தாக்குப் பிடி க்கும் சக்தி மிகுந்தவர்கள், அவர்கள். அவர்கள் அலுவல கங்கள் - அரசினர் அலுவலகங்கள் கூட காலே 9 மணிக்குத் தொடங்கிவிடுகின்றன. மாலை 5 மணிவரை வேலே செய்கின்றன. முழு நேரமும் வேலை செய் கிருர் கள், அந்த அலுவலகங்களில் உள்ளவர்கள். காலத்தை வீணுக்காமல் பணிபுரிகிருர்கள். அலுவலக முறையும் விரைவாக முடிவு செய்யக்கூடியவகையில், எளிதாக அமைந்திருக்கிறது. நம்பிக்கை என்ற அடிப் படையில் அமைந்திருக்கிறது. எனவே, நம்மைவிட அதிக நேரம் உழைப்பதோடு மட்டுமல்லாமல், பல மடங்கு அதிக வேலை செய்ய முடிகிறது. சட்சட்டென்று எடுத்த வேலைகளே முடித்துத் திருப்தி கொள்ள முடிகிறது. செல்வ நாட்டினர்கூட, நம்மைவிட அதிகம் உழைக் கிருர்கள். வறுமையில் இருந்து மீள வேண்டிய நாமும் அதிகம் உழைத்தாலல்லவா வளரமுடியும் ? உழைப்பும் உடனுக்குடன் பலன்கொடுக்கும் முறையில் அமைந்தா லல்லவா, திரண்டு வரும் வேலைகளே விரைந்து முடித்து நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியும். இப் சு. கா.-7