பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 Of கல்விப்பரம்பு அடிக்க நினேக்கும் நாம், இவ்வேறுபாடு களே ப்பற்றிச் சிந்தித்தல் நல்லதல்லவா ? கல்லூரிக்கல்வி எத்தனே ஆண்டு முதல் பட்டப் படிப்பு நான்காண்டுப் படிப்பு. ஆகவே பதினுறு ஆண்டு படித்தால்தான் பி. ஏ., அல்லது பி. எஸ்.ஸி. பட்டம் பெற முடியும். சில பகுதிகளிலே இரண்டாண்டுக் கல்லூரிகள் வைத்திருக்கிருர்கள். அவற்றில் படித்துத் தேதிகுல் பட்டம் கிடைக்காது. ஆயினும் இப்படிப்பு விண் போவதில்லே. நான்காண்டுப் பட்டப்படிப்பின் முதல் நியோக இக்கல்லூரிப் பாடமும் அமைந்திருக்கிறது. ஆகவே மாணவர்கள் பக்கத்திலுள்ள இரண்டாண்டுக் கல்லூரியில் படித்துத் தேறியபின் தொலைவிலுள்ள பெருங் கல்லூரியில் சேர்ந்து மேலும் இரண்டாண்டு படித்து பட்டம் பெற்றுவிடுகிருர்கள். - பள்ளிக்கூட மாணவர்களின் தேர்ச்சியைப் பற்றிச் சொல்லுகிறேன். உங்கள் பள்ளிகளில் எவ்வளவு தேக்கம் இருக்கும்?' என்று வினவினேன். தேக்கம்" என்ருல் அவர்களுக்குத் தெரியவில்லே. ஒரே வகுப்பில் மாணவனுே, மாணவியோ இரண்டாவது ஆண்டு படிப் பதே ‘தேக்கம்' என்று விளக்கினேன். ஏன் தேங்க வேண்டுமென்பதே அவர்கள் கேள்வி. ஒரே வகுப்பில் இரண்டாவது ஆண்டு படிக்கும் மாணவனே, வைக்கோற் போரில் ஊசி தேடுவது போல் தேடவேண்டும். காரணம் ? அவர்களது குறிக்கோள் தெளிவு. பள்ளிக்கூடம் கற்கவைத்துத் தேறவைக்கவே இருக்கிறது என்பது அவர்கள் நம்பிக்கை. நிறுத்தி வைக்கப் பள்ளிக்கூடம் ஏன் என்று கேட்கிருர்கள்.