பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 குடியாட்சியாக மலர்ந்துவிட்டது. நாட்டு ஆட்சி, மீண்டும் முற்கால 56 மன்னர்களுக்கோ, ஆங்கில ஆட்சி காலத்து 523 மன்னர்களின் கைக்கோ மாறி யிருந்தால் அவர்களும் அவர்களேச் சேர்த்த ஒரு சிலரும் கொண்டாட நாம் எல்லோரும் வேடிக்கைப் பார்க்க மட்டும் உரிமை உள்ளவர்களாக இருப்போம். ஆணுல் எங்கும் நடந்திராத முறையிலே, இந்தியாவிலே பெற்ற உரிமை மக்களாட்சியாகவே எடுத்த எடுப்பிலேயே மலர்ந்து விட்டது. அந்த உரிமையைப் பெறுவதற்கு நாட்டிலுள்ள அத்தனே பேரும் நினைக்கவோ உழைக்கவோ தியாகம் செய்யவோ இல்லை என்பது உண்மை. சிலர் நினேத் தார்கள், அதிலும் சிலர் உழைத்தார்கள், அதிலும் சிலர் தியாகம் செய்தார்கள், என்பதற்காக நாம், அது. யாருக்கோ வந்த விருந்தென்று இருக்க முடியுமா? உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் பலன் நம் அன்ன வருக்கும் தானே. இன்று, நம்மிலே பலர், இந்நாடு முழுவ தும், பிற நாடுகளிலும் பேரும், புகழும் பெற்று விளங்கு வதைக் காண்கிருேம். அடிக்கடி, உலக சபைகளில் இந்தியத் தலைவர்களும் மேதைகளும் தலே நிமிர்ந்து நின்று, வழிகாட்டுவதைப் பார்க்கிருேம். இவ்வளவு உயர்வும் சிறப்பும், அவரவர்களு டைய தனிச் சிறப்பாலும் திறமையாலும் வந்தன, என்று எண்ணுகிறீர்களா? அப்படியானுல் நீங்கள் மீண்டும் சிந்திக்க வேண்டும். எத்தனே இயற்கை ஆற்றல்கள் இருந்தாலும், அடிமை நாட்டில் வாழும் மனிதன், குடத் தில் இட்ட விளக்காவான். உரிமை பெற்ற நாட்டிலுள்ள