பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மூலையில் பிறந்திருந்தாலும், எந்நிறத்தில் பிறந்திரு . தாலும், அறிவையும் ஆற்றலேயும் ஒழுக்கத்தையும் தேடிக்கொண்டு, அவற்றைத் தனக்குப் பயன்படுத் தாமல், தன் சிறு குழுவிற்கே மடக்கி விடாமல், பரந்த் நாடு முழுமைக்கும் பயன்படுத்துகிற யாரும், எந்த நிலைக்கும் வளரலாம். வரலாம் என்பது குடியாட்சியின் அடிப்படை. அந்த அடிப்படை ஏட்டிலா நாட்டிலா! சென்ற 13 ஆண்டு கால நிகழ்ச்சிகள் நாட்டிலே, தடை முறையிலே அது இருப்பதைக் காட்டவில்லேயா? இன்று, யார், எந்தப் பொதுப் பதவியை தங்கள் பிறப்பு காரண மாக, மரபின் உரிமை பற்றி, வகித்து வருகிருச்கள்? இதை உணர்ந்த நாம், எதிர் காலத்தில், பள்ளத்தில் விழுந்திருக்கும் குருடர் எல்லாம். விழி பெற்று பதவி கொள்வதற்கான ஆக்க வேலைகள் பலவற்றிலும் ஈடுபட விழிப்படைய வேண்டும்; உறுதி பெற வேண்டும், தொடர்ந்து உழைக்க வேண்டும். சுதந்திரம் பெறுவதே அரிது. அது எளிதாக முடிந்துவிட்டதால் அதைக் காப்பதும், எளிதாக இருக்கு மென்று, யாரும் நினைத்தலாகாது. உரிமை பெறுவதை விட அதைக் காப்பதுதான் அரிது. மன்னர்களாகிவிட்ட நமக்கு, காட்டு ராஜா நினேப்பு இத்தக் காலத்துக்கு ஒத்து வராது. இன்று தேவைப்படுவது. யார் பெரிய வர்கள். யாரால், யாரை வெல்ல முடியும், மடக்க முடியும் என்கிற தனிப்போட்டி நினேப்பு அல்ல. குழுப்போட்டி நினேப்பும் அல்ல. இளம் பருவத்திலே இருக்கிற குடி ஆட்சிக்குத் துனே, எது நாட்டுக்கு நல்லது, எது எள் லோருக்கும் நல்லது, என்ற சிந்தனேயும். அதற்காக நாம்