பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 轟 - H மெய்ப்பிக்கிரு.ர்கள், மாணவ மாணவிகள். பல்வகை யாலும் உதவும் அவர்களுக்கு என் வாழ்த்துகள். ஒப்பில்லாத பாரத சமுதாயத்தை அமைப்போம் வாரீர், தம்பிகளே! தங்கைகளே! மக்கள் சக்தி மாபெரும் சக்தி! அச்சக்தி ஒன்று திரண்டு ஒரு முகமாகக் கிளம்பியுள்ளது. அதை வளர்ப்போம். பாதுகாப்புப் பணிகளே ச் சீராக்கிப் பெருக்குவோம். இருபால் ஆசிரியத் தோழர்களே! மண்ணில் இன்பங்களே விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினே இழக்கலாமோ? நம்முடைய தேவைகள் பல. ஆனல் நாட்டிற்காக நல்லுயிரையும் பணயம் வைத்துப் போராடும் வீரர் தம் தேவைகளும் பல. அவை உடனடியானவையும் அல்லவா? தள்ளிப்போட முடியாதவையும் அல்லவா? அவற்றை விரைந்து நிறைவேற்ற வேண்டாவா? அதற்காகத் தொடர்ந்து தியாகம் செய்ய வேண்டாவா? நெருக்கடி தீருமட்டும் திங்கள் தோறும் ஒரு நாள் ஊதியமாகிலும் பாதுகாப்பு நிதிக்கு உதவ வேண்டாவா? ஏன்? அவர்கள் வீழ்ந் தால் நமக்கு வாழ்வு ஏது? அவர்கள் வெற்றியே நமது வாழ்வு. இச்சிறு தியாகத்தைக்கூடச் செப்யாமல் சுதந்திரத்தைக் காப்பதுதான் எப்படி? "சுக்கள் மிளகா சுதந்திரம், எவரோ கொடுக்க? தோழர்களே! தொடர்ந்து உதவுங்கள். உதவச் செய்யுங்கள். எல்லோரையும் உதவக் செப்யுங்கள். தனியார் செலவைக் குறையுங்கள். விழாச்