பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 முறைக்குப் பலமு.ைா ஒரே படம் பார்ப்பதையும் , பொடியின் அளவையும், சிகரெட்டின் எண்ணிக்கையை யும் குறைத்துக்கொள்ள வேண்டும். இது நம்முடைய உடனடியான கடமை. சென்ற இரு உலகப்போர் களிலும், உலோகாயுதம் பேசும் மேலே நாட்டினரும் சொந்தத் தேவைகளேக் கூடப் பெருமளவு குறைத்துக் கொண்டல்லவா தாப் நாட்டிற்காகப் போராடினர்கள்? ஆத்மிகம் பேசுகிற நாம் நம் சுதந்திரத்திற்கு ஆபத்து வந்துள்ள இந்நிலையில் சொத்தத் தேவைகளே மட்டுப் படுத்திக்கொள்ளத் தயங்கலாமா? கூடாது; கூடவே கூடாது. நீங்கள் தயங்கமாட்டீர்கள், எத்தகைய கடுந் தியாகத்தையும் மேற்கொள்ள முன்வருவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழ் நாட்டில். அநேகமாக, எல்லோருமே, தட்டி லும் இலேயிலும் ஏராளமான சாப்பாட்டை விணுக எறிந்துவிடுகிருேம். மக்களே க் காக்கவேண்டிய உணவைக் குப்பையில் எறிந்து விடலாமா ? இது தவறல்லவா? இத்தவற்றையும் நாம் எல்லோரும் சீக்கிரத்திலே போக்கி விடவேண்டும். பல துறைகளிலும் அதிகமாக உழைத்து, கூடுதல் திறமையோடு உழைத்து, உற்பத்தியைப் பெருக்கும் தேசத்திலும், தனியாரின் அடிப்படைத் தேவைகளாகிய உணவு உடை, உறையுள் ஆகியவற்றிலும் சேதாரத் திற்கு இடமில்லாமல் பார்த்துக்கொள்ளுவோமாக. பழக்கத் தேவைகளுக்கான செலவுகளையும் குறைத்துக் கொள்ளுவோமாக. கல்விக்கூ டங்களில் நடக்கும் விழாக்