பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 o வளiப்பின் மூலம், அன்னதானம் கல்விதானம் ஆகிய இரு தானங்களின் பலனேப் பெறலாம் என்று கண்டனர். எனவே பள்ளிக்கூட அன்னதானத்திற்கு உதவ முன் வந்தனர். யார் யார்? எப்படி எப்படி? எல்லோரும் மதிய உணவுத் திட்டத்திற்கு உதவி புரிகின்றனர். எல்லா மதத்தினரும் உதவுகின்றனர். எல்லாச் சாதியினரும் உதவி புரிகின்றனர். எல்லாக் கட்சியைச் சார்ந்தவர்களும் கொடுக்கின்றனர். நகர மக்கள் கொடுக்கின்றனர். நாட்டுப்புற மக்கள் கொடுக் கின்றனர். இன்று, இது, வேற்றுமைகளுக்கு அப்பாற் பட்ட பொதுமக்கள் இயக்கமாக நடந்துவருகிறது. இதற்கு வேண்டிய பொருள் எங்கிருந்து வருகிறது: பொதுமக்களிடமிருந்து ஒரு பங்கு: அரசினரிடமிருந்து மற்ருெரு பங்கு. சரி பங்கல்ல. சாப்பாட்டின் நடை முறைச் செலவில், பத்தில் நான்கு பங்குக்குக் குறையா மல் பொது மக்களிடமிருந்து நன்கொடையாக வசூலிக்க வேண்டும். மீதி ஆறு பங்கை அரசினர் கொடுக் கின்றனர். இரண்டையும் கொண்டு மதிய உணவுத் திட்டம் நடக்கிறது. எத்தனே பள்ளிகளில்? 27,000 தொடக்கப்பள்ளிகளில், எத்தனே பேருக்கு உணவு அளிக்கிருர்கள்? 12, 15,000 பேருக்கு. இதை யார் நடத்துகிருர்கள்? ஒவ்வொரு பள்ளிக் கும் ஒரு மதிய உணவுக்குழு உண்டு. சில இடங்களில், பல பள்ளிகளுக்காக ஒரு மதிய உணவுக்குழு எற்படுத் திக்கொள்ளுவதும் உண்டு. நன்கொடையாளர்கள்