பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மேல் வகுப்பு படிக்க, எங்கள் பிள்ளைகள் எவ்வளவு துரம் போவது?" 'உங்கள் பிள்ளைகளை, இப் படுவழியில் இவ்வளவு நெடுந்துாரம், நடக்க விடுவீர்களா? அதைப்போலதானே இவர்களும்? இன்று நாட்டுப்புற மக்களும் கேட்கும் கேள்விகள் இவை. கல்வி சிலருக்கு என்ற கருத்து மறைந்தது. கல்வி பலருக்கு என்ற கருத்து வளர்ந்தது. அதுவும் மறைத் தது. கல்வி எல்லோருக்கும் என்ற எண்ணம் எழுந்தது: பறந்தது, எல்லாப் பக்கமும். விளேவு? ஆயிரக் கணக்கான புது தொடக்கப்பள்ளிகள், நூற்றுக்கணக் கான உயர் நிலைப்பள்ளிகள், ஏழைகளுக்கும் எட்டிற்று பள்ளிக்கூடம். பள்ளி வைத்ததும், கல்வி வளர்ந்துவிடும் என்ற கருத்து பழமையாகிவிட்டது. அதை உணரும் வாய்ப்பு அன்ருெருநாள் கிட்டிற்று. மலேயாள மாவட்டத்தில் பெரிந்தல் மண்ணு என்னுமூரில், உயர்நிப்ேபள்ளியில் மாணவர் இருவர் பசியால் மயங்கி விழும் சோகச் காட்சியை 1956-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் நான் கண்டு பதறினேன். ஆயத்தொடங்கினேன். அத் நிலை-அதாவது பசி நிலை-அங்கிங்கெளுதபடி பல பள்ளி களிலும் பரவியிருப்பது தெரிந்தது. ஏழைகளுக்கு பள்ளி வந்தும், படிப்பு வராததற்கு ஒரு காரணம் விளங் கிற்று. மாணவ மாணவிகளுக்குப் பகல் உணவு கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்' என்ற ஆலோசனே பிறந்தது. நெஞ்சிலுற்றதை சொல்லில் ஆக்கினேன். அரசினர் ஆதரித்தனர். ஆசிரியர்கள் மற்ருெரு புதுப்