பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

ல்லவா கொடுக்கவேண்டும். அதற்குப் பதில் பெரு மளவு, ஊராரே பள்ளிகளைச் சீரமைப்பது நல்லதல்லவா? ஆகவே ஒவ்வொரு பள்ளியின் வசதிக்குறைகளே யும் அவற்றைப் போக்கும் பல வழிகளையும் அக்கம் பக்கத்தி லுள்ள மக்களிடம் கூறத் திட்டமிட்டோம்.

மக்களேக்கொண்டே, மக்களின் பள்ளிக்கூடங்களே சீரமைக்கும் முயற்சி 1958-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் நாள், செங்கற்பட்டு மாவட்டம், திருவள்ளும் தாலுக்கா, கடம்பத்துரில், முதல் பள்ளிச் சீரமைப்பு மாநாடாக உருவாயிற்று. 76 பள்ளிகளுக்காக, பொது மக்கள் 336 திட்டங்களை ஏற்றுக் கொண்டனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 15,000. அவற்றில் மாநாட்டிற்குமுன் நிறைவேறிய திட்டங்க்ளின் மதிப்பும் மாநாட்டில் கொடுத்த ரொக்கமும் சேர்ந்து 1,300 ரூபாய்களாயின. இவ்வியக்கம் இன்று பல மாவட்டங் களுக்கும் பரவி புள்ளது. இதுவரை 88 மாநாடுகள் நடந்துள்ளன . 3,300 பள்ளிகளுக்காகப் பொது மக்கள் (リ・ 4 , 75, OO, O () () மதிப்புள்ள 91, () () () திட்டங்களே மேற்கொண்டனர். இவற்றில் மாநாடு களுக்குமுன் நிறைவேறிய திட்டங்களின் மதிப்பும், மாநாடுகளில் அளிக்கப்பட்ட பொருள்களின் மதிப்பும், ரொக்கமும் சேர்ந்து ரூ. 1,80,00,000 ஆகும். ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும், ஊற்றுப் பெருக்கால் உலகூட்டவில்லையா? நம் மக்களும் அப்படியே. இவர்கள் வறுமைப்பட்டிருக்கலாம். ஆனல் குணம் அற்றுவிட்டதா? இல்லை. இல்லை. அன்று