பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பும் சிந்திக்க வைத்து, அதற்கான சாதாரண பொறுப்பு களேயெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படி செய்வதே பொருளும் பணமும் கொடுக்கத் தூண்டுவது வழியே ஒழிய குறிக்கோள் அல்ல. தன்னுக்கமும் தன் முயற்சி யும் உள்ள புதிய சமுதாயத்தை உருவாக்கும் முயற்சி யில் பள்ளிச் சீரமைப்பு ஒரு வழி. ஆகவே இத்திட்டத் தின் வெற்றி தோல்வியை, பெற்ற வசூலைக் கொண்டு மதிப்பிட வேண்டா. மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன மாற்றத்தைக்கொண்டு மதிப்பிடுவதே சரி. நாட்டி லுள்ள ஏழை எளிய மக்களெல்லாம், படியாத பல்லா யிரக்கணக்கான மக்களெல்லாம் இவ்வியக்கத்தில் பங்கு கொண்டு, பலவகையிலும் உதவி புரிந்துள்ளார்கள். மனுப்போட மட்டுமே பழகிய மக்களெல்லாம், தங் -ளேயே நம்பி, அரிய, ஆக்க வேல்ேகளில் ஈடுபடச்செய்து விட்டது பள்ளிச் சீரமைப்பு இயக்கம். இருந்த நிலம் முழுவதையும் நிலதானமாகக் கொடுத்த திருமங்கலம் தாலுக்க வன்னிவேலன்பட்டி மாடசாமி, வத்தலகுண்டு கடைநிலை ஊழியர் வேல் நாயகர், திருக்கண்ணபுரம் வேலாயுதம் வாய்க்கால் கரையார். ஆண்டு ஊதியம் அத்தனேயும் எடுத்துக்கொள்ளுங்கள்' என்று அள்ளிக் கொடுத்த குமாரபுரம் பண்ணையாள் கோபால நாயக்கர், பல்லாண்டுகளாகச் சிறுகச்சிறுகச் சேர்த்துப் பழங்கலத் தில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் ஐயாயிரத்தையும் அறிவுப்பணிக்கு ஏற்றுக்கொள்ளுங்கள் என்று தாராள மாக வழங்கிய ஆனந்தமங்கலம் மகாலட்சுமி அம்மை யார் . முதலிய சாதாரண மக்கள் முதல், செல்வந்தர் வரை. பலரது வள்ளல் தன்மையை வெளிக்கொணர்ந்த