பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் மக்கள் அனேவரும், எல்லாத் துறைகளிலும், சாதி, சமய, இட வேறுபாடின்றி, சம வாய்ப்பு பெற வேண்டுமென்பது நமது குறிக்கோள். தமிழ்நாட்டில் கல்வித் துறையில் எல்லோருக்கும் சம வாய்ப்பு வந்து விட்டது. மக்களுக்கு எவ்வளவு கல்வி போதும்? ஐந்தாவது வகுப்பு வரையில் மட்டும் படித்தால் போதுமா? போதவே போதாது. எட்டாவது வகுப்பு வரை படிக்கிற படிப்பும் அவ்வாறே, அரை ஆறு தாண்டு வதற்கு ஒப்பாகும். குறைந்தது, பதினென்ருவது வகுப்பு வரையிலாவது, எல்லோரும் படிக்க வேண்டும். இதற்கு வாழுமிடம், வறுமை குறுக்கிடக் கூடாது. இதுவே தமது குறிக்கோள். இக்குறிக்கோளே நோக்கித் தமிழ்நாடு சென்ற பத்தாண்டுகளாகப் பெரு நடை போட்டு வந்துள்ளது. இதன் விளைவு என்ன? இன்று தமிழ்நாட்டில் 300 மக்கள் உள்ள ஒவ்வோர் ஊரிலும் தொடக்கப் பள்ளிக்கூடம் உள்ளது. உயர் தொடக்கப்பள்ளிக் கல்வி வசதிக்காக, உயர் (திருச்சி வானெலி கிலேயத்தில் 4- 10–1 963-இல் நிகழ்த்திய உரை 1