பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 முதல் எட்டு வகுப்புகளுக்கும் ஒரே பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எல்லோரும் ஒன்ருக இருந்து கற்க வேண்டும், மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வு இருத்தல் கூடாது என்ற நன்ளுேக்கத்தோடு சீருடை முறையும் தோன்றிச் சிறப்பாக வளர்ந்து வருகிறது. எல்லோரும் படித்தால், ஒன்ருகப் படித்தால் மட்டும் போதுமா? நன்ருகவும் படிக்க வேண்டு மல்லவா? 10 அல்லது 11 ஆண்டுகளில் படித்ததை மூலதனமாகக் கொண்டு, 60 அல்லது 70 ஆண்டுகள், இத் தவீன உலகிலே வாழவேண்டும். ஆகவே, பெறு கிற கல்வி, தரத்தில் உயர்ந்ததாக இருக்க வேண்டும். "நாங்களெல்லோரும் படித்தகாலத்துக் கல்விக்கு இக்காலக் கல்வி தரத்தில் குறைந்தது' என்பது சிலர் கூற்று. இது உண்மையல்ல. என்னுல் இக்கூற்றை ஒப்புக்கொள்: முடியவில்லே. எனினும், மேலும் தரமான கல்வி அளிக்க வேண்டும், அளிக்கமுடியும்' என்பதை நின்வு படுத்தத்தான் வேண்டும். கல்லூரிக்கு, உயர்நிலப்பள்ளியிலிருந்து மாணவர் கள் வருகின்றனர். உயர்திலேப்பள்ளிக்கு, தொடக்கப் பள்ளியிலிருந்து பிள்ளைகள் வருகின்றனர். கல்வியின் தரம் உயரவேண்டுமென்ருல் கல்லூரியில் மட்டுமோ, உயர்நிலேப்பள்ளியில் மட்டுமோ தரமாகச் சொல்லிக் கொடுத்தால் போதுமா? அங்கு வருகிறவர்களும் தர மானவர்களாக இருக்க வேண்டுமே? எனவே தொடக் கப் பள்ளிகளிலும் தரமுள்ள கல்வி அளிக்கப்பட வேண்டும். தரமுள்ள கல்வியை வெறும் ஆணையால்,