பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இரண்டொரு மாறுதல்கள் செய்வதன் மூலம் அளிக்க முடியாது. ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகளில் அளித்துவிடமுடியாது. நம்பிக்கையோடு, சாேக்காமல் சில ஆண்டுகளாவது பாடுபடவேண்டும். அதுவும் வழி வகை தெரிந்து பாடுபடவேண்டும், அப்போதுதான் வெற்றி கிட்டும். தரமான கல்விக்கு இடவசதி, துனேக்கருவிகள், பயிற்சி பெற்ற போதிய ஆசிரியர்கள், திருப்தியுள்ள ஆசிரியர் சமுதாயம், பெற்ருேர் ஒத்துழைப்பு. மாணவர்களின் ஒரு மனப்பட்ட ஈடுபாடு ஆகிய எல்லாம் வேண்டும். இன்னும் என்ன வேண்டும்? இவை மட்டும் இருந்தால் போதுமா? தலே வேறு, கைகள் வேறு, கால்கள் வேறு, உடல்வேறு, என்ற உறுப்புகள் தனித் தனியாக, உயிருள்ள மனிதனுகுமா? உயிருள்ள மனிதன் என்ருல் இவை அனேத்தும் இனேந்திருக்க வேண்டும். குருதி, நிற்காமல், எல்லா உறுப்புகளிலும் பாய வேண்டும். இதைப்போலவே தொடக்கக் கல்வி, உயர் நி லேக் கல்வி, கல் லூரிக்கல் வி இவை மூன்றும் இ னேந் திருக்க வேண்டும். ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அறிவுக் குருதி ஒடிக்கொண்டே இருக்க வேண்டும். அந்நியன் ஆட்சிக்காலத்தில், பொதுமக்களுக்குக் கல்வி கிடைக்கவில்லே. பரம்பரை படிப்பாளிகள் விட்டுக் குழந்தைகள், சில பணக்காரர்கள், அலுவ லாளர்கள் விட்டுக் குழந்தைகள் மட்டுமே அப்போது படித்தனர். படிப்புச் சூழ்நிலையிலேயே வளர்ந்த சிலரே படித்த அக்காலத்திலும் ஒவ்வொரு வகுப்பிலும் நிறைய பேர் தேருமல் தவறினர்கள். அத்தேக்கத்தின் காரண