பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கொள்ளும் முறையைத்தான் பின்பற்றுகின்றனர். தேர்ச்சி என் குறைந்தது?" என்ருல், ஏழை மக்கள், பிற்போக்கு மக்கள்' என்று ஏதோ சாக்குப் போக்குச் சொல்வதைத்தான் அநேகப் பள்ளிகளில் பார்க்கலாம். இந்த திலே இன்னும் இருக்கலாமா? எல்லோரையும் தேற வைக்கும் பணியை நாட்டிற் குச் செய்யும் நற்பணியாகக் கொள்ள வேண்டும். கல்வி யில் தவறிப் போகிற ஒவ்வொரு இந்திய மாணவனும் 'நாட்டின் வளர்ச்சிக்குத்தடை, எதிரிக்கு உதவுபவன்' என் கிற உணர்ச்சி எல்லோருக்கும் ஏற்படவேண்டும். இத்தகைய உணர்ச்சி இப்போது துளிர்த்துக் கொண்டு வருகிறது. அதன் பயணுக மேற்பார்வைப் படிப்புத் திட்டம் நடை முறைக்கு வந்துள்ளது. தொடக்கப் பள்ளிகளிலும்கூட மெல்லக் கற்போருக்காக இம்முறை வந்துள்ளது. ஆசிரியர் மேற்பார்வையில் மாணவர் களுக்குக் கூடுதலான பயிற்சி கிடைக்கிறது. இன்று தொடக்கப்பள்ளிகள் தனித்துநின்று இயங்குகின்றன. உயர்நிலைப் பள்ளிகளும் தம் போக்கிலே போகின்றன. கல்லூரிகளின் போக்கும் அம்மாதிரியே. இவைகளுக்குள் தொடர்பு இல்லை. ஆகவே ஒரு நிலேயினர் எதிர்பார்ப்பது மற்ற நிலையினருக்குத் தெரியாது. மேலும் கீழ் நிலையிலுள்ள வர்கள் எவ்வளவு தான் செய்யக்கூடுமென்பது மேல் நிலேயிலிருப்பவர்களுக்குத் தெரிவதில்லே. தொடர்பற்ற இந்திலேயை மாற்றி எல்லா நிலையிலும் உள்ளவர்களுக் கிடையே தொடர்பு ஏற்படுத்த வேண்டும். இது உடனடியாகச் செய்ய வேண்டிய வேலே. தமிழ்நாட்டில்