பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 தி , ' " ஏறத்தாழ 1300 உயர் நிலேப்பள்ளிகளும், 3111)-க்கும் மேற்பட்ட உயர் தொடக்க, உயர் ஆதாரப்பள்ளிகளும் உள்ளன. பிந்தியவை தான் முந்தியவைகளுக்கு நாற்றங்கால். இவைகளுக்குள் ஒரு தொடர்பு ஏற் படுத்துவது முதல் வேலே. நகரங்களிலுள்ள சில பள்ளி களைத் தவிர ஏனைய உயர்நிலைப்பள்ளிகளில், பெரும் பாலும் சுற்றியுள்ள உயர்தொடக்கப்பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்கள்தாம் சேர்த்துக் கொள்ளப்படு கின்றனர். ஆகவே ஒவ்வோர் உயர்நிலைப்பள்ளியும் அதைச்சுற்றி இருக்கும் உயர் தொடக்கப்பள்ளிகளோடு தொடர்பு வைத்துக்கொள்ளலாம். சாதாரணமாக ஓர் உயர்நிலைப்பள்ளிக்கு 4 அல்லது 5 உயர் தொடக்கப் பள்ளிகளோடுதான் தொடர்பு தேவைப்படும். சிலவற் றிற்குச் சிறிது குறைவாகவும், சிலவற்றிற்குச் சிறிது கூடுதலாகவும் இருக்கலாம். ஒவ்வோர் உயர்நிலைப்பள்ளியும் சுற்றியுள்ள உயர் தொடக்கப்பள்ளிகளுக்கு “ஞானத்தந்தை'யாக இருப் பதன்மூலம் இத்தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு தொடக்கப்பள்ளியும், மாதாந்தர பாடத் திட்டம் போட்டு பள்ளி ஆய்வாளரிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்பது இப்போதைய விதி. இப்புதிய "ஞானத்தந்தை' திட்டத்தின் கீழ், தொடக்கப் பள்ளித் தலே மையாசிரியர், மாதாந்தர பாடத்திட்டத்தைச் சம்பந்தப்பட்ட உயர்நிலப்பள்ளித் தலைமையாசிரியருக் குக் காட்ட வேண்டும். 5 முதல் 8 வகுப்புகளுக் கான பாடத்திட்டத்தைக் காட்டில்ை போதும், உயர் அ ஆ T.-)"