பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நிேேப்பள்ளித் தலைமை ஆசிரியர், தன் உதவி ஆசிரிய களுடன் கலந்து அப்பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள லாம். அல்லது அதில் சில மாற்றங்கள் கூறலாம். அந்தந்த வகுப்புக்குக் கொடுத்த மொத்தப் பாடங்களே பும் அந்த ஆண்டுக்குள்ளேயே முடித்தால் போதும். இதைக் கவனத்தில் கொண்டு மாற்றங்கள் கூறலாம். எனவே ஒரு மாதத்திற்குள்ள பகுதியைக் குறைக்கும் படியோ இன்னுெரு மாதத்திற்குள்ள பகுதியைக் கூட்டும் படியோ, ஆலோசனே கூறுவதில் தவறில்லே. இவ்வாலோசனைப்படி மாற்றியமைக்கப்பட்ட மாதாந்தர பாடத்திட்டத்தை உயர் தொடக்கப்பள்ளித் தலேமை ஆசிரியர் தம்முடைய பள்ளியில் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். ஒரு மாதம் அவ்வாறு நடத்திய பிறகு நிலைமையை உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரி யருக்கு நேரில் தெரிவிக்க வேண்டும். எதிர்ப்படும் சங்கடங்களேயும், சிக்கல்களேயும் அவருக்குத் தெரிவித் தாள் அவற்றைத் தீர்ப்பதற்கு ஆலோசனே கிடைக்கும். அந்த ஆலோசனப்படி அடுத்து வரும் மாதங்களில் பாடம் நடத்தினுல் பலன் அதிகரிக்கும். சில சமயங்களில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், குறிப்பிட்ட பாடம் நடத்தும் உபவழிகளேயும், முறைகளையும் உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் களுக்குக் கூறவும் முடியும். தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாதம் ஒரு முறை உயர்நிலைப்பள்ளித் தலேமை ஆசிரியர் களோடு தொடர்பு கொள்வது நலம். இன்னும் அடிக் கடி தொடர்பு கொள்ள முடியுமானுல் அதைத் தடுப்